Saturday, March 31, 2012

இராவணின் புத்திர சோகம் - 1

புத்திர சோகம் இராவணனை படுத்துகிறது.

எவ்வளவு பெரிய வீரன்.

உலகை எல்லாம் வென்றவன். அவன் அழுகிறான். தரையில்
கிடந்து புரளுகிறான்.

நடக்க கூட முடியாமல் காலை இழுத்துக் கொண்டு
நகர்கிறான்.

அது என்னவோ அவன் நிலத்தை உழுவது போல இருக்கிறது.

அவன் சோகத்தை கம்பன் பிழிந்து தருகிறான்.

படிக்கும் நமக்கு இராவணன் மேல் ஒரு பரிதாபம்
வருகிறது. ஐயோ பாவம் என்று ஒரு பச்சாதாபம் எழுகிறது.

-------------------------------------------------------------------------------
எழும்;
இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்று
அழும்; அரற்றும்;அயர்க்கும்;
வியர்க்கும், போய்
விழும்; விழிக்கும்;முகிழ்க்கும்;
தன் மேனியால்,
உழும் நிலத்தை; உருளும்;
புரளுமால்.
------------------------------------------------------------------------------------------

மிக எளிமையான பாடல். இந்த பாட்டுக்கு எல்லாம் அர்த்தம்
கேட்டால், உங்களையும் CSJK வையும் ஒரே காரில் அனுப்பி அதில் 80 -s வந்த
பாடல்களையும் போட்டு விடனும். ....:)

எழும்;
= எழுந்து நிற்பான்

இருக்கும்; = நிற்க கூட முடியாமல் உட்காருவான்

இரைக்கும்; = அப்படி அடிக்கடி எழுந்து உட்கார்ந்ததால் மூச்சு இறைப்பான்.
அவ்வளவு வலிமை குன்றி விட்டான்.

இரக்கம் உற்று அழும்; = சுய பச்சாதாபத்தில் இரக்கம் கொண்டு
வாய் விட்டு அழுவான்

அரற்றும்; = அர்த்தம் இல்லாமல் அரற்றுவான்

அயர்க்கும்; = சோர்ந்து போவான்

வியர்க்கும் = பலம் குன்றியதால்
வியர்ப்பான்

போய் விழும்; = இருக்கவும் முடியாமல், நிற்கவும்
முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் போய் விழுவான் (மெத்தை மேல்
?)

விழிக்கும்; = என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பான்

முகிழ்க்கும்; = ஒன்றும் தெரியாமல் கண்ணை மூடுவான் (முகிழ்த்தல் = கண்களை மூடுதல்
)
தன் மேனியால் உழும் நிலத்தை; = அவன் காலை இழுத்து இழுத்து
நடப்பது நிலத்தை உழுவது போல இருக்கிறது

உருளும்; புரளுமால். = தரையில் கிடந்து உருளுவான்,
புரளுவான்

3 comments:

  1. This is a fantastic poem. It really brings in front of our eyes Ravanan's sadness. Did this describe it after the death of Indrajeet? Thanks for sharing this. Wish you all the best with the new blog.

    ReplyDelete
  2. Great work RS.My best wishes..Keep it going.

    SRU

    ReplyDelete