Saturday, March 31, 2012

கம்ப இராமாயணம் - குகன் அறிமுகம்

குகன் பார்க்க எப்படி இருப்பான் ?

அந்த முரட்டு உருவத்தை கூட கம்பன் வர்ணிக்கும் அழகே தனி.

தமிழ் படிக்க முடிந்ததற்காக மகிழ்வடையும் தருணங்கள் , கம்பனை படிக்கும்
தருணங்கள்


-----------------------------------------------------------------------------
ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்நாற்றம் மேய நகை
இல் முகத்தினான்,சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்,கூற்றம் அஞ்சக்
குமுறும் குரலினான்.
------------------------------------------------------------------------------------------------------

ஊற்றமே = மிகுந்த ஊக்கத்தோடு, வலிமையோடு

மிக ஊனொடு மீன் நுகர் = ரொம்ப கறி மீன் எல்லாம் உண்டு . கறி மீன் எல்லாம் ரொம்ப
ஆர்வமா சாப்பிடுவான்.
நாற்றம் மேய = உடம்பு எல்லாம் ஒரு நாற்றம்

நகை இல் முகத்தினான் = முகத்திலே ஒரு சிரிப்பே
கிடையாது. மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டான்
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் = கோபம் இல்லாமலே கூட கண்ணில் தீ
வரும் படி பார்ப்பான். அப்ப கோவம் வந்தால் எப்படி பார்ப்பானோ ?
கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான் = அந்த யமனும்
(கூற்றம் = யமன் ) அஞ்சும் படியான இடி இடிக்கும் படி உள்ள குரலை கொண்டவன்

2 comments:

  1. தமிழ் படிக்க முடிந்ததற்காக மகிழ்வடையும் தருணங்கள் , கம்பனை படிக்கும்
    தருணங்கள்

    இது எல்லா..மொழிகளூக்கும் பொருந்தும். ஆனால் நீங்கள் பண்டைய தமிழ் என்று எழுதினால் அது மிகச் சரி. (அந்த பாக்கியம் இங்கில்லை)

    கவிதைகளை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பதிலும் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை...இந்த காரணத்தால் தான்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் அவர்கள் மொழியின் மேல் ஒரு காதல் இருக்கும் என்பது உண்மை தான்.



      இருப்பினும், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணேம்" என்று பாரதி கூறியதைப் போல, சில விஷயங்கள் தமிழில் மட்டுமே உள்ள இனிமை.





      மொழி பெயர்ப்பு பற்றிய உங்கள் அபிப்ராயத்தில் இருந்து naan வேறு படுகிறேன். நம்மால் எல்லா மொழியையும் அறிந்து கொள்ள முடியாது. மொழி பெயர்ப்பு நமக்கு பிற மொழிகளில் உள்ள படைப்புகளை அறிந்து கொள்ள உதவுகிறது.





      லியோ டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' நாவல் படித்துப் பாருங்கள். மொழி பெயர்ப்பை பற்றிய உங்கள் எண்ணம் மாறலாம். அவ்வளவு இனிமையான மொழி பெயர்ப்பு.

      Delete