Thursday, April 26, 2012

குறுந்தொகை - அவர் எப்படி இருக்காரோ ?

குறுந்தொகை - அவர் எப்படி இருக்காரோ ?

கணவன் வெளியூர் போனால், மனைவி அவனைப் பற்றி கவலைப் படுவாள். சரியான நேரத்துக்கு சாபிட்டாரோ இல்லையோ, புது இடத்துல தூக்கம் வருமோ இல்லையோ, மாத்திரை எல்லாம் சரியான நேரத்துக்கு மறக்காம சாப்பிடணுமே, என்று ஆயிரம் கவலை இருக்கும்.

ஆனா ஊர் என்ன சொல்லும் ? "புருசன பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலையோ ? அதுக்குள்ள  தேடிருச்சோ ?" என்று நையாண்டி செய்யும்.

பெண்ணின் மனதை யார் தான் புரிந்து கொள்ள முடியும் ?

இங்கே ஒரு கணவனை பிரிந்த குறுந்தொகை பெண் சொல்கிறாள்:



எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்க லன்ன பாறை யேறிக்
கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவவர் சென்ற வாறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே

என்ன இது ஏதோ சீன மொழிப் பாடல் மாதிரி இருக்கா?

எறும்பு வளை அயிர் குறும் பல் சுனைய
உலை கல் அன்ன பாறை ஏறி
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலை என்ப அவர் சென்ற ஆறே
அது மற்று அவலங் கொள்ளாது
நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே 

அவர் போகின்ற வழி ரொம்ப கடினமானது. ரொம்ப வெயில் அடிக்கும். வழிப் பரி செய்யும் கொள்ளையர்கள் அந்த வழியில் நிறைய உண்டு. நான் அவரு எப்படி பத்திரமா போய் சேரனுமேணு கவலைப் பட்டுகிட்டு இருக்கேன், இவங்கல்லாம் அதை புரிஞ்சுக்காம என்னனமோ சொல்றாங்க.....

பொருள்:

எறும்பு வளை அயிர்  = எறும்பு புத்து போல

குறும் பல் சுனைய = சின்ன சின்னதாக இருக்கும் நீர் நிலைகள் (சுனை = குட்டி நீர் தேக்கம்) 

உலை கல் = உலையில் வைத்த கல்

அன்ன பாறை ஏறி = போன்ற பாறையில் ஏறி

(situation புரியுதா ? பாலை நிலம், தண்ணியே இல்ல, பாறை எல்லாம் கொதிக்குது. தலைவர் அந்த வழியா போறாரு_


கொடுவில் = கொடிய வில்லை ஏந்திய 

எயினர் = எயினர் இனத்தை சேர்ந்தவர்கள் (அம்பு எய்பவர்கள் எயினர்)

பகழி மாய்க்கும் = பகழி அப்படினா அம்பு. அம்பை தீட்டும் அல்லது அம்பை விடும்.

கவலை என்ப = (என்னோட) கவலை என்னனா ?

அவர் சென்ற ஆறே = அவர் சென்ற அந்த வழி தான்.

அது மற்று = அதை பற்றி

அவலங் கொள்ளாது = கவலைப் படாது

நொதுமல் = உதாசீனமாக, நட்புணர்வு இல்லாமல்,

கழறும் = கடிந்து கூறும்

இவ் அழுங்கல் ஊரே = அழுங்கல் என்றால் துன்பம், கஷ்டம். துன்பம் தரும் இந்த ஊரே

புரிஞ்சுக்கவே மாடேங்கறாங்க....



2 comments:

  1. ஆஅஹா! இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு கவிதை எழுதப்பட்டிருந்தால் தமிழுக்கு ஒரு பெரிய பெருமைதான்.

    ஒரு முறை தமிழ் இலக்கியத்தின் காலக் கோடு (time line) ஒன்று எழுதினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. You already asked for this. This weekend job...will be done !

    ReplyDelete