Saturday, April 21, 2012

திரு மந்திரம் - ஒன்றே குலம். ஒருவனே தேவன்

திரு மந்திரம் - ஒன்றே குலம். ஒருவனே தேவன்


ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று முதலில் சொன்னவர் திரு மூலர். அவர் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு வாசகத்தை சொல்ல மிக பெரிய தைரியம் வேண்டும். 

சாதியும், மதமும், தீண்டாமையும் மலிந்து இருந்து காலத்தில் இப்படி ஒரு வரியை சிந்திப்பது கூட கடினமான காரியம். 

இப்படி சில புரட்சிகரமான கருத்துகளை சொன்னதால், திருமந்திரம் பல காலமாய் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருந்தது. 

சரி, முதல் வரி தெரியும், மற்ற வரிகள் ?





ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே







ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.


ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது


நன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.




நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்தால், இறப்பே கிடையாது.


நாணாமே = வெட்கப் படாமல்

சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை


நும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்


ஒன்றே குலம் என்பதன் மூலம் உடல் அளவில் எல்லோரும் ஒன்று என்றார்.


ஒருவனே தேவன் என்பதன் மூலம் மனதளவிலும் மனிதர்களுக்கு இடையில் எந்தப் பிரிவும் கூடாது என்றார்

பிரிவுகளை அகற்றி எப்போதும் எல்லோருக்கும் நல்லதையே சிந்தித்து வந்தால் மரணமில்லா பெறு வாழ்வு பெறலாம்



19 comments:

  1. நல்லதை நினைக்க வெட்கம் எதற்கு?

    "சென்றே புகும்கதி இல்லை" என்பதின் பொருலும் புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. சென்றே புகும் கதி இல்லை என்பது

      இறப்பினால் உடல் நீங்கி சென்று மறுபடி தாயின் கருவறை புகும் கதி இல்லை என்பதை குறிக்கும்

      Delete
  2. ஆம்,ஏன் வெட்கம்

    ReplyDelete
  3. பிரித்து படித்தால்
    நல்லது நினைத்தால் நமன் இல்லை

    நாணாமே சென்றே புகும் கதி இல்லை
    உயிர் நீங்கி செல்ல மறுபடி பிறக்க வெட்கப்பட வேண்டும்

    ReplyDelete
  4. I just came across this link. Meaning of this poem is not they way here described. It is completely about siddha tradition onself realization, if did, no more death.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. அருமையான விளக்கம். திரு மூலரும் திருவள்ளுவரும் ஒரே தேவன் என்ற கோட்பாட்டை அன்றே கொண்டுள்ளனர். எத்தனை பெரிய சமூக சிந்தனை!

    ReplyDelete
  6. ஒன்றே குலம்... உயிர்கள் என்ற ஒன்று மட்டுமே குலம்.அனைத்து உயிர்களும் ஒன்றே.
    ஒருவனே தேவன்... உயிர்கள் யாவும் இயங்க வழிவகுக்கும் காரணி இறைவனே அனைத்து உயிர்களுக்கும் பொதுவான தேவன்.
    நன்றே நினைமின்...நல்லதை நினைக்கும் போது
    நமனில்லை... இறப்பு என்பது இல்லை.
    நாணாமே... வெட்கம் தேவையில்லை.
    ஏனெனில் பிரபஞ்சத்தை அறிந்தோம்.
    சென்றேபுகும் கதி வேறில்லை... பிரபஞ்ச இயக்கம் யாவும் இறைவனே என்ற
    ஒன்றின் நிலை புரிந்து கொண்ட பின் வேறு நிலை இல்லை.
    இதனை மனத்தில் நிறுத்தி வாழ்ந்தால் நிலையான பெருவாழ்வு பெறலாம்.

    ReplyDelete
  7. பிரபஞ்ச உயிர்களில் நிறைந்து இயக்குபவன் இறைவனே என்று தெளிந்த நல்லனவற்றை மனதில் நிறுத்தி வாழ்ந்தால் நிலையான பெருவாழ்வு கிட்டும்.

    ReplyDelete
  8. நல் விளக்கம் நன்றே,
    புகும் கதி பற்றி நிறைய பாடல்கள் திருமந்திரத்தில் உள்ளன

    ReplyDelete
  9. ஐயா,
    தாங்கள் எழுதியிருப்பது முற்றிலும் தவறு. மேலே சொன்னதற்கு திருமூலருக்கு எதற்கு தைரியம் வேண்டும்? விஷயங்களைப் புரிந்து கொண்டவர்களுக்கு உண்மையை உரைக்கப் பயமில்லை. ஜாதி,மதம், தீண்டாமை இவற்றையெல்லாம் உண்டாக்கியவர்கள் தமிழரல்லாத அயோக்கிய அரசியல்வாதிகள் தான். அதை முட்டாள் தனத்துடன் தாங்களும் புரிந்து கொள்ளாமல், கொள்ளை அடிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அந்நாய்கள் குறிப்பிட்ட சமூகத்தை உயர்ந்தோராக்கி மற்றவர்களைத் தாழ்ந்தோராக்கி இன்றளவும் இலவசத்தை வழங்கி அவர்களைப் பிச்சைக்காரர்களாக்கி, வாரிசு அரசியலை நிரந்தரமாக்கிக் குளிர் காயும் பேய்கள். பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பே திருமூலர் சொன்ன கருத்தை ருக்வேதம் கூறியுள்ளது. ஜாதி, மதம், தீண்டாமை என்பதெல்லாம் அதில் இல்லை. இதற்குத்தான் தமிழன் நிறையப் படிக்க வேண்டும், மொழிகள் பல கற்க வேண்டும். இல்லாவிடில் இந்நாய்கள், தாங்கள் தான் தமிழைக் காக்க வந்த தெய்வங்க்ள என்று கூறி ஜன்ங்களை முட்டாள்களாக்கி ஜாதி வெறி, மத வெறி போன்றவற்ரைத் தூண்டி தமிழர்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் மக்கள் மிகவும் அறிவு பெற்று விட்டால் இவர்களுடைய உண்மை உருவம் வெளியாகி விடும் என்ற பயம் தான் காரணம். பல கடவுள் உருவங்கள் இருப்பது பாமரன் புரிந்து கொண்டு உருவமற்ற அந்த சக்தியைப் புரிந்து பக்குவம் அடைவதற்கே.

    ReplyDelete
    Replies
    1. அரைவேக்காட்டுப்பதிவவு,பார்ப்பண,அடிவருடி,பார்ப்பணியத்தை காப்பாற்ற அரசியல் வாதிகள் மீது பழி!

      Delete
    2. அரசியல்வாதிகளல்ல பக்தியின்றி புத்தியின்றி பித்தேறிய பார்ப்பனர் (ஆரியர்)தான் சாதி ஏற்றத் தாழ்வு கொள்கையை உண்டாக்கினர்

      Delete
    3. Who told there is no division based on varna in Rig Veda. Rig veda is the root cause of all the filth in society. You study Rig veda first

      Delete
  10. Very nice comment --- unmai thamizhan

    ReplyDelete
  11. கண்ணன் என்ன சொல்கிறான்:
    "எது நடந்ததோ அது நன்றாக நடந்தது"
    பின் ஏன் மற்றவர்களை திட்டவேண்டும்? எதாவது பிடிக்கவில்லை என்றால், அதை மாற்ற முயற்சி செய்யுங்கள். மன அமைதி பெற, வரலாற்றின் சரியான புரிதல் வேண்டும். அதற்கு ஆரம்பம், வெள்ளை / கருப்பு தோல் எப்படி உருவானது என்று கண்டுபிடியுங்கள்...

    ReplyDelete
  12. பொருள்: மனித குலம் முழுமையும் ஒன்று தான். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை. இறைவனும் ஒருவனேதான். எப்போதும் எவர்க்கும் நல்லதையே நினையுங்கள். அடுத்தவர்களுக்கு நல்லது நினைக்கும் போது, உங்கள் உயிருக்கு ஆபத்தில்லை. வெட்கப்படாமல் துணிந்து நீங்கள் செல்லத்தக்க வழி வேறு இல்லை. எனவே மனத்துள்ளே சிவனை நினைத்து, அவன் அருளுணர்வோடு பொருந்தி, அவன் திருவடியை சரண்டைந்து நற்கதியடையுங்கள்.

    மனிதர்களில் ஏற்றத்தாழ்வு இல்லை. எல்லோரும் ஒரே குலம், கடவுள் ஒருவனே என்கிற புரட்சிகரமான சிந்தனையை இப்பாடலில் சொல்கிறார் திருமூலர்.

    ReplyDelete
  13. சென்றே புகுங்கதியில்லை நும் சித்தத்து என்பதற்கான உண்மையான விளக்கத்தை திருமூலநாயனாரே அறிவர். இருப்பினும் அவர் அருள் பெற்றவரின் விளக்கமே சிறந்ததாக இருக்கும். எனது கருத்து என்னவெனில் சிவலோகம் செல்வதற்கான வழி அல்லது உபாயம் எமது சித்தம் மட்டும் இருந்தால் போதாது . முதலில் இறையருள் கிடைக்க வேண்டும் என்பதேயாகும். அவன் அருளின்றி எதுவும் நடவாதல்லவா!

    ReplyDelete