Saturday, April 28, 2012

குறுந்தொகை - அவன் பொய் சொல்ல மாட்டான்

குறுந்தொகை - அவன் பொய் சொல்ல மாட்டான்


சோலைகள் எல்லாம் பூத்து குலுங்குகின்றன. கார் காலம் வந்து விட்டதோ ? இருக்காது. அவன் போகும் போது என்ன சொல்லி விட்டுப் போனான் ? கார் காலத்தில் வந்து விடுவேன் அப்படினு தான சொன்னான் ? அவன் இன்னும் வரல...அதுனால இது கார்காலமா இருக்காது....




வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே

சீர் பிரித்த பின்

வண்டு படத் ததைந்த கொடி இணர் இடை இடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பிற் தோன்றும் புதுப் பூ கொன்றை
கானம் கார் எனக் கூறினும்
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே

பொருள்:

வண்டு பட = வண்டுகள் வந்து தேன் உண்ண

ததைந்த = அடர்ந்த

கொடி இணர் = நீண்ட கொடிகள்

இடை இடுபு = இடையில் இட்டு ஓர் இடை இடையே இட்டு

பொன் செய் = பொன்னால் செய்யப்பட்ட

புனை இழை = புனையக் கூடிய ஆபரணங்களை

கட்டிய மகளிர் = அணிந்த பெண்கள்

கதுப்பிற் = கூந்தலில்

தோன்றும் = தோன்றக்கூடிய

புதுப் பூங் கொன்றை = புதிய கொன்றை மலர்கள்

கானம் = கானகம். பெண்கள் தங்கத்தால் ஆன ஆபரணங்களை அணிந்து
இருப்பது மாதிரி, கானகம் கொன்றை மலர்கள் பூத்து அழகாக
விளங்குகிறது

கார் = கார் காலம்

எனக் கூறினும் = என்று கூறினாலும்

யானோ தேறேன் = நான் நம்ப மாட்டேன்

அவர் = என் காதலர் / கணவர்

பொய் வழங்கலரே = பொய் சொல்ல மாட்டானே (பொய் வழங்க 
மாட்டான்)


1 comment:

  1. மிக அழகான கவிதை. அற்புதம்.

    ஒருவேளை எனக்கு இப்படியும் இருக்குமோ என்று தோன்றியது:

    "வண்டு படர்ந்த கொடி போன்ற இடுப்பு உடைய மகளிர் தம் கூந்தலில் கொன்றை மலர்களைச் சூடியிருக்கிறார்கள். இந்தக் கானகம் கார் காலம் என்று கூறினாலும் நான் நம்ப மாட்டேன். என் காதலர் பொய் சொல்ல மாட்டர்."

    இந்த மாதிரி கவிதை 1700-2000 வருடஙளுக்கு முன் எழுதப்பட்டிருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய செய்தி.

    ReplyDelete