Tuesday, April 10, 2012

கம்ப இராமாயணம் - இராவணின் தோரணை


சூர்பனகை இராவணனிடம் சீதையை பற்றி சொல்லுகிறாள். கொஞ்சம் flash back ... 

அவள் வருவதற்கு முன் இராவணன் எப்படி அரசவையில் வீற்று இருக்கிறான் என்று பார்போம்.

கம்பன் இராமனை இரசித்த அளவுக்கு இராவணனையும் இரசித்தான் என்றே சொல்ல வேண்டும்.

அவன் இருந்த தோரனையை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறான்.

ஒருவரை பற்றி சொல்லுவது என்றால், அது அவரை மற்றும் குறிப்பாக சொல்லுவதாக இருக்க வேண்டும். 

அவருக்கு இரண்டு கண்ணு, நடுவுல ஒரு மூக்கு இருக்கும்
என்று சொல்லுவது எவ்வளவு அபத்தம். 

அது தான் எல்லோருக்கும் இருக்கிறதே.

உயரமா, சிவப்பா, கண்ணாடி போட்டு இருப்பாரு, மூக்கு மேல கூட ஒரு மச்சம் இருக்கும் அப்படின்னு சொன்னா கொஞ்சம் தெளிவா இருக்கும்.

இராவணனை பற்றி சொல்லணும்.

பெரிய வீரன், பராகிரம சாலி. பக்தன். அப்படின்னு சொன்னா போதுமா ? அவனுக்குன்னு சில விஷயங்கள் இருக்குல ? அதைப் பற்றி சொல்லணும். அது ராமனுக்கு கூட பொருந்தாது.

கம்பன் சொல்லுகிறான்.

இராவணன் வைரம், வைடூரியம், இரத்தினம் போன்ற விலை உயர்ந்த கற்கள் அணிந்த தங்க நகைகளை அணிந்து இருக்கிறான். 

அதில் சூரிய ஒளி பட்டு சிதறுகிறது. அவன் நடந்து வரும் வழி எல்லாம் அப்படி ஒரு ஒளி வீசுகிறது. 

அவன் இருபது தோள்கள். அப்படி இப்படி அசையும் போது அந்த ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் தலைகள் நெளியும் போது எப்படி இருக்கமோ அப்படி இருக்கிறது.

சந்திரன், சூரியன் மற்ற கோள்கள் எல்லாவற்றையும் பிடித்து இலங்கையில் அடைத்து வைத்து இருக்கிறான்.

அவை எல்லாம் வரிசையாக, வாய் பொத்தி நிற்கின்றன. 

அவற்றை போல இருக்கிறது அந்த அணிகலன்களில் உள்ள மணிகள்.
.
----------------------------------------------------------
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின்
தொகை வழங்க, வயிரக் குன்றத்

தோள் எலாம் படி சுமந்த விட அரவின்
பட நிரையின் தோன்ற, ஆன்ற

நாள் எலாம் புடை தயங்க, நாம நீர்
இலங்கையில் தான் நலங்க விட்ட

கோள் எலாம் கிடந்த நெடுஞ் சிறை அன்ன
நிறை ஆரம் குலவ மன்னோ

------------------------------------------------------------
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின்
தொகை வழங்க,

கூர்மையான ஒளி வழங்கும் மணிகள் கத்தை கத்தையாய் ஒளி வீச. அவன் நடக்கும் போது ஒளிக் கற்றைகள் அங்கும் இங்கும் ஜ்வலிகின்றன.


வயிரக் குன்றத் தோள்

குன்று போல் உயர்ந்த தோள்கள். வைரம் போல் உறதியான தோள்கள்.

எலாம் =நம்மை மாதிரி அவனுக்கு இரண்டு தோளா ? இருபது தோள். அந்த தோள்கள் எல்லாம்.

படி சுமந்த விட அரவின் =அரவு என்றால் பாம்பு. விடம் என்றால் விஷம். உலகை சுமந்த விஷம் கொண்ட பாம்பின் (ஆதி சேஷனின் )

பட நிரையின் தோன்ற =அதன் படம் எப்படி நெளியுமோ அதுபோல் தோன்ற

ஆன்ற நாள் எலாம் புடை தயங்க =இங்கு நாள் என்றால் கோள்கள். அந்த கோள்கள் எல்லாம் ஒரு பக்கம் தயங்கி நிற்க (புடை = பக்கம் )

நாம நீர் இலங்கையில் =நீர் சூழ்ந்த இலங்கையில்

தான் நலங்க விட்ட =அவன் அந்த கோள்களை உருட்டி விளையாடுவானாம்

கோள் எலாம் கிடந்த நெடுஞ் சிறை =அந்த கோள்களை எல்லாம் சிறையில் பூட்டி வைத்து இருக்கிறான்.

அன்ன =அது போல 

நிறை ஆரம் குலவ மன்னோ =அவன் மேனியில் தவழும் ஆபரணங்களில் உள்ள மணிகள் அந்த கோள்களை போல இருக்கிறதாம்.


எப்படி அந்த கோள்களை எல்லாம் கட்டி வைத்து இருக்கிறானோ , அதுபோல இருக்கிறதாம் அவன் மேல் இருக்கும் மணி ஆரங்கள்.

இராவணனுக்கு மட்டுமே பொருந்தும் உதாரணம்.







No comments:

Post a Comment