Wednesday, May 2, 2012

கம்ப இராமாயணம் - கண்டனன், கண்களால் ?




கம்ப இராமாயணம் - கண்டனன், கண்களால் ?


அந்த காலத்தில் புகை படம் கிடையாது. 

இராமன் கானகத்தில் இருக்கிறான். சீதையை பற்றி அனுமனிடம் அடையாளம் சொல்லி அனுப்ப வேண்டும். என்ன சொல்லுவது ?

யோசித்துப் பாருங்கள். அவ சிவப்பா, உயரமா, அழகா இருப்பா அப்படின்னு சொல்லாலாம். 

இது ஒரு அடையாளமா ? அனுமனும் சென்று சீதையை பார்த்து விட்டு வந்து சொல்கிறான் இராமனிடம். இராமன் எப்படி நம்புவான் ? 

யாரையாவது பார்த்து விட்டு வந்து சீதையை பார்த்ததாக நினைக்கலாம் அல்லவா ? 

பார்த்தது சீதை தான் என்று அனுமனுக்கும் சந்தேகம் வரக் கூடாது, அனுமன் சீதையை தான் பார்த்த்தான் என்று இராமனும் நம்ப வேண்டும். 

தெளிவு படுத்தவது கம்பன். 

சொல்லில் விளையாடுகிறான். 

கண்டனென்கற்பினுக்கு அணியைகண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனிதுறத்திஐயமும்
பண்டு உள துயரும்என்றுஅனுமன் பன்னுவான்;

கண்டனென் = நான் கண்டேன்

கற்பினுக்கு அணியை = கற்புக்கு அணிகலமாய் திகழும் சீதையை

கண்களால் = கண்களால். அது என்ன கண்களால் ? எல்லாரும் 

கண்களால் தான் பார்ப்பார்கள். அது தான் முதல் வார்த்தையிலேயே சொல்லியாச்சே "கண்டெனன்" அப்படின்னு.

சொல்லுவது கம்பன். 

பயனிலாத சொல்லை சொல்லுவானா ? 

அவள் கற்பின் அணி என்பதை அவளுடைய கண்களை கொண்டு நான் கண்டு கொண்டேன் என்று அர்த்தம்.

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் 

கண்டெனன் கற்பினுக்கு அணியினை (அவளின்) கண்களால் என்று பொருள் கொள்ள வேண்டும்.

தெண் = தெளிந்த

திரை அலைகடல் = சுருள் சுருளாக அலைகளை கொண்ட கடல்

இலங்கைத் தென் நகர் = இலங்கை என்ற தெற்கில் உள்ள நகரில்

அண்டர் நாயக = தேவர்களின் நாயகனே

இனிதுறத்தி = இனி துறந்துவிடு

ஐயமும் = சந்தேகத்தையும்

பண்டு உள துயரும் = பழைய துயரையும்

என்றுஅனுமன் பன்னுவான்; = என்று அனுமன் சொல்லுவான் 

6 comments:

  1. எந்த சந்தேகம் பற்றிச் சொல்கிறான் அனுமன்? "ராமா, மற்றவன் வீட்டில் இத்தனை நாள் இருந்திருக்கிறாளே என்று சீதையை சந்தேகிக்காதே" என்று பொருளா? அதனால்தான் "கற்பினுக்கு அணி" என்று முதலிலேயே சொல்கிறானா?

    ReplyDelete
    Replies
    1. அது தான் கம்பனின் திறமை. அதை சொல்லாமல் விடுகிறான். படிக்கும் நமக்கு தோணலாம், "ஒரு வேளை இராமன் சந்தேகப் படுவானோ" என்று அல்லது அனுமனுக்கு தோன்றியிருக்கலாம். இராமன் கேட்காமலேயே அதை அனுமன் வாயால் சொல்ல வைக்கிறான் கம்பன்.

      Delete
    2. இது முதன் முதலாக சீதையை இலங்கையில் பார்த்து விட்டு வந்து அனுமன் சொல்லியது

      Delete
    3. கற்புக்கரசி சீதை என்று ராமனுக்கு தெரியும். அதனால் "கர்ப்பினுக்கு அணியினை" என்கிறான்.

      Delete