Thursday, May 31, 2012

ஐந்திணை ஐம்பது - காத்திருந்தவளை பார்த்திருந்தேன்


ஐந்திணை ஐம்பது - காத்திருந்தவளை பார்த்திருந்தேன்


யாராவது உங்கள் வரவுக்காக காத்து இருப்பார்களா?

அவர்கள் அப்படி உங்களுக்காக காத்திருப்பதை மறைந்து இருந்து இரசித்து இருக்கிறீர்களா?

அட, நம்மையும் கூட ஒரு ஜீவன் தேடுகிறதே என்று உள்ளம் சிலிர்த்ததுண்டா ?

அப்படி தன் காதலி தனக்காக காத்திருப்பதை காண விரும்பும் காதலனின் பாடல் இங்கே....




நூனவின்ற பாகதேர் நொவ்விதாச் சென்றீக
தேனவின்ற கானத் தெழினோக்கித்--தானவின்ற
கற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி
நிற்பா ணிலையுணர்கம் யாம்.

ஏதோ கல்வெட்டு மாதிரி இருக்கா? பதம் பிரித்தபின் பாருங்க....

நூல் நவின்ற பாக ! தேர் நொவ்விதாக சென்றீக
தேன் அவிழ்ந்த கானகத்து எழில் நோக்கி - தான் பயின்ற
கற்பு தாழ் வீழ்ந்து கவுண் மிசை கை ஊன்றி
நிற்பாள் நிலை உணர்கம் யாம்

நூல் = புத்தகங்களை

நவின்ற பாக ! = படித்து உணர்ந்த பாகனே (தேர் பாகனிடம் எவ்வளவு பணிவு...எல்லாம் காதல் படுத்தும் பாடு)

தேர் = தேரை

நொவ்விதாக = விரைவாக

சென்றீக = செலுத்திடுக (செலுத்துதலை ஈக...அட அடா என்ன பணிவு)

தேன் அவிழ்ந்த = தேன் சிந்தும் (பூக்கள் மலர்ந்துள்ள கானகம்)

கானகத்து = காட்டின்

எழில் நோக்கி = அழகை நோக்கி

தான் பயின்ற = தான் கற்ற

கற்பு தாழ் வீழ்ந்து = கற்பு என்ற தாழ்பாழ் விழுந்து. அது என்ன கற்பு தாழ்பாழ்? பொருள் ஈட்ட கணவன்/காதலன் செல்வதும், பின் வந்து இல்லறத்தில் ஈடுபடும் வரை கற்பு எனும் தாழ் போட்டு தன் ஏக்கத்தையும், ஆசையையும் காப்பாற்றி வந்தாள். 

கவுள் மிசை = கன்னத்தில்

கை ஊன்றி = கை வைத்து

நிற்பாள் = நின்றிருப்பாள்

நிலை = அந்த நிலையை (அவள் கன்னத்தில் கை வைத்து நிற்கும் அந்த நிலையை)

உணர்கம் யாம் = பார்த்து உணர வேண்டும் நான்



(Appeal: If you like this blog, please press g+1 below to express your liking)


2 comments:

  1. அது சரிதான். நமக்காக யாராவது காத்திருப்பதில் ஒரு தனி மகிழ்ச்சிதான்.

    ReplyDelete
  2. நண்பரே, பழந்தமிழ்ச் செய்யுள்களுக்கு அற்புதமாகப் பொருள் கூறி அழகாக விளக்கியுள்ள தாங்கள், எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். தங்கள் தமிழ்த் தொண்டு தொடர என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete