Tuesday, May 29, 2012

கலிங்கத்துப் பரணி - விடுறா, ஆனா விடாதடா

கலிங்கத்துப் பரணி - விடுறா, ஆனா விடாதடா


கலிங்கத்துப் பரணி என்ற நூல் ஜெயங்கொண்டார் என்ற புலவரால் எழுதப் பட்டது.

எழுதிய காலம் கி.பி. 1112 என்று சொல்கிறார்கள்.

ஆயிரம் வருஷம் முந்தியது.

குலோத்துங்க மன்னன் கலிங்கத்தை வென்றதை பாராட்டி எழுதிய பாடல்.

பரணிக்கு ஒரு புலவன் ஜெயங்கொண்டார் என்று சிறப்பு பெற்றவர்.

காதல், வீரம், அந்த கால வாழ்கை முறை, என்று பல விஷயங்களை சேர்த்து எழுதி இருக்கிறார்.

அதில் கடை திறப்பு என்று ஒரு பகுதி.

ஜொள்ளர்களுக்கு பெரிய விருந்து.

வள்ளுவரின் காமத்துப் பாலோடு போட்டியிடும் பாடல்கள்.


படித்து முடித்தவுடன், உதட்டோரம் ஒரு மெல்லிய புன்னகையையை வரவழைக்கும் பாடல்கள்.

கடை (வாசல்) திறப்பு என்ற பகுதியில், வீரர்கள் போர் முடிந்து வீட்டிற்கு வருகிறார்கள்.

அவர்களின் மனைவியோ, காதலியோ அவர்கள் மேல் ஊடல் கொண்டு கதவை திறக்காமல் முரண்டு பண்ணுகிறார்கள்.

அவர்களை சமாதனம் பண்ணி கதவை திறக்க சொல்லும் பாடல்களின் தொகுப்பு.

romance இன் உச்ச கட்டம் !




விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி
வெகுளி மென் குதலை துகிலினைப்
பிடிமின் என்றபொருள் விளைய நின்றருள்செய்
பெடைந லீர்கடைகள் திறமினோ.

விடுமின் எங்கள்துகில் விடுமின் = என் உடையையை விடு, விடு

என்றுமுனி = என்று கோபப்பட்டு

வெகுளி = ஒண்ணும் தெரியாத (பாப்பா)

மென் = மென்மையான

குதலை = குழந்தை போல் (முகத்தை வைத்து கொண்டு)

துகிலினைப் = உடையினை

பிடிமின் = பரவாயில்லை, எடுத்துக்கொள்

என்றபொருள் விளைய = என்று சொல்லுவது மாதிரி

நின்றருள்செய் = நின்று அருள் செய்வீர்கள் (அடடா...என்ன அருள்)

பெடை = பெண் மயில் போன்ற அழகானவளே

நலீர் = நல்ல பொண்ணுல

கடைகள் திறமினோ. =கதவ திறடா செல்லம்

(Appeal to reader: If you like this blog, please click g+1 button below to express your liking)

2 comments:

  1. Thanks for the introduction about Kalingathu Barani.

    ReplyDelete
  2. உண்மைதான், உதட்டோரத்தில் புன்னகை வரத்தான் செய்கிறது. நன்றி.

    ReplyDelete