Thursday, May 17, 2012

பழமொழி - முன்னுரை



பழமொழி - முன்னுரை



மனிதனின் கண்டு பிடிப்புகளில் மிக முதன்மையானது மொழி என்று கூறலாம்.

பொருள்களுக்கும், சம்பவங்களுக்கும், நிகழ்வுக்களுக்கும் பெயரிட்டது, அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகளை அறிந்து சொன்னது மிகப் பெரிய விஷயம்.

பழமொழிகள், மொழிக்கு மேல் ஒரு படி. ஆங்கித்தில் meta data என்று சொல்லுவதைப் போல.

பழமொழிகள் மனிதனின் அனுபவத் திரட்டுகள்.

மீண்டும் மீண்டும் மனித வாழ்க்கையில் தோன்றும் சம்பவங்களை ஒரு வரியில் அடக்கிய சாமர்த்தியம்.

முது மொழி என்றும் கூறுவர்.

தொல்காப்பியம் எவ்வளவு புராதனமானது?

அதில், தொல்காப்பியர் முதுமொழி பற்றி கூறுகிறார் என்றால், அந்த முதுமொழிகள் எவ்வளவு பழமையானதாக இருக்க வேண்டும்.

அப்படி பழமொழிகள் வருவதாய் இருந்தால், இந்த தமிழ் மொழி எவ்வளவு தொன்மையானதாக இருக்க வேண்டும் ?




'நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்
ஒண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப


நுண்மையும் = நுட்பமானதாகவும்

சுருக்கமும் = சுருக்கமானதாகவும்

ஒளியுடை மையும் = இருளில் இருந்து பொருட்களை தெளிவாக அறிந்து கொள்ள தவும் ஒளி போலவும்

ஒண்மையும் = சிறப்பானதாகவும்

என்றிவை = இவை எல்லாம் ஒன்று சேர்ந்து

விளங்கத் தோன்றிக் = விளங்கிக் கொள்ளும் படி தோன்றி

குறித்த பொருளை = ஒரு குறித்த பொருளை

முடித்தற்கு வரூஉம் = முடிவாக, இறுதியாக, சொல்ல வருவது

ஏது நுதலிய = நுதலிய என்றால் தோற்றுவித்தல் என்று பொருள். நுதல் என்றால் நெற்றி.

முதுமொழி என்ப = அப்படி இருப்பது தான் முது மொழி

சங்க இலக்கியத்தில் பதினெண் கீழ் கணக்கு என்ற தொகுப்பில், பழமொழி என்று தலைப்பில் நானுறு பாடல்கள் உள்ளன.

ஒவ்வொரு பாட்டும் ஒரு பழமொழியை கொண்டு முடியும்.

அதில் இருந்து சில பாடல்களைப் பார்க்கலாம் அடுத்து வரும் blog குகளில்....





1 comment:

  1. எதிர்பார்க்கிறோம். தருக.

    ReplyDelete