Tuesday, June 5, 2012

விவேக சிந்தாமணி - தெருவில் நின்ற தேவதை


விவேக சிந்தாமணி - தெருவில் நின்ற தேவதை


பேருந்து நிலையத்தில் அவளுக்காக காத்திருக்கும் நேரம்.
இப்ப வந்துருவா.

அதோ தூரத்தில் வருவது அவ மாதிரி தான் இருக்கு.

அவளே தான்.

நெருங்கி வர வர இதயத் துடிப்பு எகிறுகிறது.

அந்த கரிய நீண்ட குழல், மயில் போன்ற சாயல், குழந்தை போல் களங்கமில்லா முகம்...

கையெடுத்து கும்பிடலாம்....தெய்வம் நேரில் வந்த மாதிரி இருக்கிறது....

விவேக சிந்தாமணியின் 107 ஆவது பாடல்....

அருகில் இவளருகில் இவளருகில் வர உருகும் 
கரிய குழல் மேனியவள் கானமயில் சாயல் 
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ 
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே.

அவள் கிட்ட வர வர என் மனம் உருகுகிறது.
கரிய நீண்ட முடி, மயில் போல் சாயல், அழகிய மார்பு, சிறிய இடை, வெகுளியான முகம், தெருவில் நின்ற தெய்வம் அவள்.


2 comments:

  1. அய்யோ, சும்மா கொல்றீங்க!

    இதைப் படிச்சா என்னவெல்லாம் நினைவுக்கு வருது தெரியுமா? டால்ஸ்டாயின் "தூய்மை"யிலே இருந்து என்னென்னவோ ஞாபகம் வருது!

    "பேதை" வர்றாளாம். அவ பேதைன்னு இவனுக்கு எப்படித் தெரியும்?! எல்லாம் காதல் மயக்கம் படுத்துகிற பாடு!

    அந்த ஒரு "ஐயோ" என்ற ஒரு வார்த்தை போட்டான் பாரு, அதுக்கே காசு கொட்டிக் கொடுக்கலாம். அவனுக்குத் தாங்க முடியலையாம். அதுதான் "ஐயோ" என்கிறான்.

    என்ன அருமையான பாட்டு. இதை யார் எப்போ எழுதினது? இன்னைக்குப் படிச்சாலும் என்ன எளிமையா, அழகா இருக்கு.

    இதைப் படிக்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன். ரொம்ப நன்றி!

    ReplyDelete
  2. பாரதியின்

    ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்ற பாட்டில் வெகு தொலைவில் உள்ளவனை அருகாமைக்கு அழைப்பது போல் வாஆஆஆஆ! வாஆஆஆ! வா ! என்ற தொனியில் பாடியிருப்பதாக பொருள் கொண்டு ரசித்துள்ளேன்.

    அதே போல் அவள் அருகில், மிக அருகில், மிக மிக அருகில் வந்துகொண்டிருக்கிறாள் என்பதை அப்போதே கவிஞர் அழகு படிக்கப் படிக்கத் திகட்டாத பேரழகு !

    ReplyDelete