Friday, June 8, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அவளை விட்டு இங்கு ஏன் வந்தாய் ?


நாலாயிர திவ்ய பிரபந்தம் - அவளை விட்டு இங்கு ஏன் வந்தாய் ?

இராத்திரி வேளையில், சின்ன இடையுள்ள ஒரு பெண்ணை திருட்டுத்தனமாய் நீ அழைத்துக்கொண்டு போகும் போது, எதிரில் வந்த இன்னொரு பெண்ணுக்கு கையால் ஜாடை செய்வதை நான் பார்த்தேன்.

இப்ப எதுக்கு அவளுகளை விட்டு விட்டு எங்கே வந்தாய்.

அங்கேயே போ என்று கண்ணனை செல்லமாக கோபிக்கிறாள் இந்த பெண். 

குலசேகர ஆழ்வாரின் ஆறாம் திருமொழி, 702 ஆவது பாசுரம்.
 

மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு வீங்கிருள் வாயென்றன் வீதியூடே
பொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப் போகின்ற போதுநான் கண்டுநின்றேன்
கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டுக் கைவிளிக் கின்றதும் கண்டேநின்றேன்
என்னுக் கவளைவிட் டிங்குவந்தாய் இன்னமங் கேநட நம்பிநீயே

சீர் பிர்த்தபின்:

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு வீங்கு இருள் வாய் எந்தன் வீதி ஊடே
பொன் ஒத்த வாடை குக்கூடலிட்டு போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண் உற்ற அவளை நீ கண்ணால் இட்டு கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னும் அங்கே நட நம்பி நீயே 


பொருள் 


மின் = மின்னலை
ஒத்த = போன்ற
நுண் இடையாளை = சிறிய இடையாளை
கொண்டு = கையில் பிடித்துக் கொண்டு
வீங்கு = அடர்ந்த
இருள் வாய் = இருட்டில்
எந்தன் வீதி ஊடே = என் தெருவின் வழியாக
பொன் ஒத்த = பொன்னை போன்று ஜொலிக்கும்
ஆடை = ஆடையை
வாடை குக்கூடலிட்டு = குளிருக்கு முக்காடிட்டு கொண்டு
போகின்ற போது = நீ போகின்ற போது
நான் கண்டு நின்றேன் = நான் கண்டு நின்றேன்
கண் உற்ற அவளை = கண்ணால் கண்ட அவளை
நீ கண்ணால் இட்டு = நீ கண்ணடித்து
கை விளிக்கின்றதும் = கையால் ஜாடை செய்வதும்
கண்டே நின்றேன் = கண்டு நின்றேன்
என்னுக்கு = எதுக்கு
அவளை = அவளை
விட்டு = விட்டு விட்டு
இங்கு வந்தாய் = இங்கே வந்தாய்
இன்னும் = திரும்பியும்
அங்கே நட நம்பி நீயே = நீ அங்கேயே போ



2 comments:

  1. So many girlfriends! One to hold hands with, one to give a sign to, and one to turn him away ... ! Three in one poem!

    (What kind of morality does our religion teach us?!)

    Nice poem, though.

    ReplyDelete
  2. That is the beauty of Hindu Religion. No other religion takes so much liberty with their Gods.

    ReplyDelete