Thursday, June 21, 2012

தனிப்பாடல் - எப்பதான் விடியுமோ ?


தனிப்பாடல் - எப்பதான் விடியுமோ ?


காதலனை பிரிந்து இருக்கிறாள்.

இரவு அவளுக்கு நீண்டு கொண்டே போகிறது.

ஒருவேளை, இந்த இரவு இனிமேல் விடியவே விடியாதோ என்று சந்தேகம் வருகிறது அவளுக்கு.....


அரவு விழுங்கிற்றோ அச்சுத்தான் இற்று
புரவி கயிறுருவிப் போச்சோ - இரவிதான்
செத்தானோ வேறுதிசை சென்றானோ என்தோழி
எத்தால் விடியும் இரா.”

அரவு விழுங்கிற்றோ = சூரியனை பாம்பு தின்று விட்டதோ

அச்சுத்தான் இற்று = சூரியனின் இரதத்தின் அச்சு முறிந்து போய் விட்டதோ?

புரவி = அவன் தேரில் கட்டியிருந்த குதிரைகள்

கயிறுருவிப் போச்சோ = கையிற்றை உருவிக் கொண்டு ஓடி விட்டனவோ?

இரவிதான் = ஒருவேளை சூரியன் தான்

செத்தானோ = இறந்து விட்டானோ?

வேறுதிசை சென்றானோ = கிழக்கில் உதிப்பதற்கு பதில், வேறு திசையில் சென்று விட்டானோ?

என்தோழி = என் தோழி

எத்தால் விடியும் இரா.= இந்த இரவு எப்படிதான் விடியப் போகிறதோ ? எதனால் விடியப் போகிறதோ ?



2 comments:

  1. When I did not find any post yesterday, I thought that the server was down and kept pressing the refresh button. 20th June was surely not a complete day for me.

    ReplyDelete
    Replies
    1. Oh I am sorry. I went to Chennai. I should have updated my readers...:)

      It was not a well planned trip....

      Thank you.

      Delete