Thursday, June 28, 2012

திருக்குறள் - பணம் சம்பாதியுங்கள்


திருக்குறள் - பணம் சம்பாதியுங்கள்


நமது இலக்கியங்கள் பெரும்பாலும் துறவறம், நிலையாமை, ஈகை, மெய் பொருள் நாடுதல் என்று தான் சொல்லுகின்றன.

உடலை உறுதி செய்தல், பொருள் ஈட்டுதல் என்பன பற்றி சொல்லும் இலக்கியங்கள் மிகக் குறைவு.

திருக்குறளில், அதுவும், கட்டளை இடுவது போல் இந்த குறள் சற்று வித்தியாசமான குறள்.

"பணம் சம்பாதியுங்கள், உங்கள் பகைவர்களின் செருக்கை அறுக்க அதை விட கூரிய பொருள் இல்லை" என்கிறார் வள்ளுவர்.





செய்க பொருளை! செறுநர் செருக்கு அறுக்கும்
எஃகு அதனின் கூரியது இல்.


செய்க பொருளை! = பணம், சொத்து சம்பாதியுங்கள்

செறுநர் = (உங்கள்) எதிரிகளின்

செருக்கு அறுக்கும் = இறுமாப்பை அறுக்கும்

எஃகு = இரும்பு, ஆயுதம்

அதனின் கூரியது இல்.= அதை விட கூரியது எதுவும் இல்லை

ஆயுதம் நிஜமான பொருட்களை உடைக்கும்.

எதிரிகளின் மமதை என்பது ஒரு பொருள் இல்லை, எனவே அதை எந்த ஆயுதத்தாலும் உடைக்க முடியாது.

நாம் நிறைய பொருள் சேர்த்தால், அது அவர்களின் இறுமாப்பை உடைக்கும்.

எனவே, பொருள் சேருங்கள்.

உங்களை பிடிக்காதவர்களின் வாயை அடையுங்கள்.


No comments:

Post a Comment