Saturday, June 30, 2012

நாலடியார் - எதைப் படிப்பது?


நாலடியார் - எதைப் படிப்பது?


எதைப் படிப்பது, எவ்வளவு படிப்பது, எதை படிக்காமல் விடுவது, 

எல்லாவற்றையும் படிக்க முடியுமா ? போன்ற குழப்பங்கள் நமக்கு இருக்கும்.
எத்தனை ஆயிரம் புத்தகங்கள், வலை தளங்கள்...அனைத்தையும் படித்து மாளுமா ?

இந்த குழப்பம் இன்று வந்ததில்லை, நாலடியார் எழுதப்பட்ட காலத்திலேயே இருந்திருக்கிறது. 

"படிக்க வேண்டியதோ கடல் போல் இருக்கிறது. படிக்க கிடைத்த நாட்களோ கொஞ்சம் தான். அந்த குறைந்த நாட்களிலும் ஆயிரம் தடங்கல்கள்.

எனவே, படிக்க வேண்டியதை ஆராய்ந்து, தெரிந்து எடுத்து படிக்க வேண்டும், நீரில் இருந்து பாலை பிரித்து உண்ணும் அன்னம் போல்"


கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.



கல்வி கரையில! = கறக்க வேண்டிய கல்வி கரை இல்லாத கடல் போல் இருக்கிறது

கற்பவர் நாள்சில; = கற்றுக் கொள்ள இருக்கும் நாட்களோ கொஞ்சம் தான்.

மெல்ல நினைக்கின் பிணிபல; = அமைதியாக நினைத்துப் பார்த்தால்

தெள்ளிதின் = தெளிவு பிறக்கும்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே = ஆராய்ந்து, தனக்கு அமையுக்கூடிய (தேவையானவற்றை) கற்பது தான் சிறந்தது

நீரொழியப் = நீரை விடுத்து

பாலுண் குருகின் தெரிந்து.= பால் மட்டும் அருந்தும் அன்னப் பறவை போல 


1 comment:

  1. படிக்க வேண்டியதை நினைத்தால் முடிக்க எவ்வளவு ஜன்மம் எடுக்க வேண்டி வருமோ என்று தோன்றும். Some times I think how nice it would be if i could rewind my life to my twenties.

    ReplyDelete