Wednesday, June 6, 2012

கம்ப இராமாயணம் - மெய் சிலிர்த்த பூமி


கம்ப இராமாயணம் - மெய் சிலிர்த்த பூமி


இராமன் நடந்து வருவதை சூர்பனகை பார்க்கிறாள். அவன் பாதம் பட்டு பூ மகள் உடல் சிலிர்க்கிறாள். அவளுக்கு உடல் எல்லாம் புல்லரிக்கிறது. பூமியின் மேல் உள்ள புற்கள் எல்லாம் சிலிர்த்து நிற்கின்றன. அது பூ மகள் உடல் சிலிர்த்ததை போல் இருக்கிறது என்று நினைக்கிறாள். 


உடுத்த நீர் ஆடையள், உருவச் செவ்வியள் 
பிடித் தரு நடையினள் பெண்மை நன்று; இவன் 
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம்மயிர் 
பொடித்தன போலும், இப்புல் என்று உன்னுவாள்


உடுத்த நீர் ஆடையள் = See through dress

உருவச் செவ்வியள் = செம்மையான உருவம்

பிடித் தரு நடையினள் = பெண் யானை போன்ற நடையினை கொண்டவள்

பெண்மை நன்று; = பெண்மைக்கு உண்டான குணங்கள் எல்லாம் நன்றாக 
கொண்டவள்

இவன் = இராமன்

அடித்தலம் = திருவடி

தீண்டலின் = தீண்டப் பெற்றதால்

அவனிக்கு = இந்த பூமிக்கு

அம்மயிர் = அந்த மயிர் 

பொடித்தன போலும், = சிலிர்த்தன போலும்

இப்புல்என்று = இந்த புற்கள் எல்லாம் என்று

உன்னுவாள் = எண்ணுவாள்

யாருக்கும் தோன்றாத கற்பனை. 


5 comments:

  1. I AM BACK FROM MY HOLIDAYS. Very much excited to go through the missed ones. Spent wonderful two and half hour time reading your old blogs. தித்திப்பில் எந்த பக்கம் இனிக்கிறது என்று சொல்ல முடியாது போல் உங்களுடைய ஒன்றொன்றும் அருமை. அதுவும் ஒரு வாரம் என்ன எல்லாம் எழுதி இருப்பீர்களோ என்ற SUSPENSE இருந்து கொண்டே இருந்தது. இன்றைய தலைப்பு 'மெய் சிலிர்த்த பூமி' மிகவும் அருமை,Hats off to your imagination.

    ReplyDelete
    Replies
    1. Say, "hats off to Kamban"...:)

      I am a cut and paste specialist

      Delete
  2. The first two lines - do they refer to Soorpanagai's disguise, or to the bhoomi?

    If it is the former, then your interpretation of "see through dress" is fine. If it is the latter, then maybe it means that water is the dress for the earth. What do you think?

    But interesting poem.

    ReplyDelete
    Replies
    1. Soorpanagai's description.

      But your view is interesting.

      Delete
  3. Wonderful service to develop Tamil language!

    ReplyDelete