Friday, June 15, 2012

நாலடியார் - அவளா இவ ? எப்படி மாறி போய்டா?


நாலடியார் - அவளா இவ ? எப்படி மாறி போய்டா?


சில பெண்களை அவர்களின் இளமை காலத்தில் பார்த்திருப்போம். அவ்வளவு அழகாக இருந்திருப்பார்கள்.

இப்ப அவர்களை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாய் இருக்கும்.

எப்படி இருந்த பொண்ணு, இப்படி ஆகிவிட்டாளே என்று.

இந்த பொண்ணுக்கா அந்த காலத்தில் படிப்பு, வேலை, வெட்டி எல்லாம் விட்டு விட்டு உருகினோம் என்று இருக்கும்.

இதை உணர்ந்த நாலடியார் பாடல் ஒன்று...


தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.


தாழாத் = முதுகு வளைந்து தாளாமல்

தளராத் = உடல் தளர்ந்து

தலைநடுங்காத் = தலை நடுங்கி

தண்டூன்றா = தண்டு ஊன்றி

வீழா = விழுந்து

இறக்கும் = இறக்கும் தருவாயில் இருக்கும்

இவள்மாட்டும் = இவளை

காழ்இலா = ஆராய்ச்சி இல்லாத

மம்மர் = மயக்கம்

கொள் மாந்தர்க் = மயக்கம் கொள்ளும் மக்களுக்கு (இளைஞர்கள்)

கணங்காகும் = அணங்கு ஆகும். அழகிய பெண்ணாக இவள் இருந்தாள். எப்ப தெரியுமா ?

தன்கைக்கோல் =அவள் கையில் இப்ப உள்ள ஊன்று கோல்

அம்மனைக்கோல் = அவளுடைய அம்மாவின் கையில்

ஆகிய ஞான்று = இருந்த பொழுது

அதாவது, பொண்ணுங்க பின்னால ஜொள்ளு விட்டுகிட்டு அலையாதீங்க. வேலையப் பாருங்க என்கிறார் புலவர். 

எங்க கேக்குராங்க்ய....தறுதல பயகுட்டிக 



General:

1. If you like this blog, please click g+1 button below to express your opinion. It is just a click. Nothing more than that.

2. If you want to see other Naaldiyaar poems, just click in the label "Naaladiryaar". It will list all the poems of Naaladiyaar in this blog.

2 comments:

  1. இதெல்லாம் சகஜம்தான் என்கிறார்!

    ReplyDelete
  2. INTRO வை பார்த்தால் சொந்த அனுபவம் மாதிரி இருக்கிறது.

    ReplyDelete