Saturday, June 9, 2012

திரு நீற்றுப் பதிகம் - திரு நீற்றின் மகிமை


திரு நீற்றுப் பதிகம் - திரு நீற்றின் மகிமை


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முக்குருணி விநாயகர் சந்நிதி உண்டு.
அங்கே, கோவில் மடை பள்ளியில் சமையல் செய்த அடுப்பின் சாம்பலை போட்டு வைத்து இருப்பார்கள்.


அந்த சாம்பலை பூசி கொண்டால் நோய் குணமாகும் என்பது ஒரு நம்பிக்கை.

இன்றும் நடை முறையில் உள்ள வழக்கம் இது.

பாண்டிய நெடுஞ்செழியனுக்கு ஞானசம்பந்தர் அந்த சாம்பலை பூசி நோய் தீர்த்ததாக வரலாறு உண்டு.

அது பற்றி திரு நீற்று பதிகம் என்று பதிகத்தில் பாடியுள்ளார்.


மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

மந்திர மாவது நீறு = திரு நீறு மந்திர சக்திகள் வாய்ந்தது
வானவர் மேலது நீறு = தேவர்களும் தங்கள் மேனியின் மேல் பூசிகொள்வது திரு நீறு
சுந்தர மாவது நீறு = ஆழகானது திரு நீறு
துதிக்கப் படுவது நீறு = வணங்கத் தகுந்தது திரு நீறு
தந்திர மாவது நீறு = தந்திரம் ஆனது திரு நீறு
சமயத்தி லுள்ளது நீறு = சமயங்கள் சொல்லுவது திரு நீறு
செந்துவர் வாயுமை பங்கன் = சிவந்த பவளம் (துவர் = பவளம்) போன்ற இதழ்களை உடைய உமாதேவியை பாகத்தில் கொண்ட
திருவால வாயான் திருநீறே. = திரு ஆல வாய் என்ற மதுரையம்பதியில் உள்ள சிவனின் திரு நீறே அது

ஆல வாய் என்றால் = வால் + வாய்.

3 comments:

  1. So what is great about this song? I don't see any poetic beauty. Sorry.

    ReplyDelete
  2. Dilip will say this only

    ReplyDelete