Monday, July 16, 2012

திருவாசகம் - பெண் இன்பமும் பேரின்பமும்


திருவாசகம் - பெண் இன்பமும் பேரின்பமும்


இறைவனுக்கு நம்மை போல் ஒரே ஒரு குணம் தான் இருக்குமா ? இல்லை, அந்த குணங்கள் மாறிக் கொண்டே இருக்குமா ?

இறைவன் இப்படி தான் இருப்பான் என்று சொல்லிவிட்டால், அவன் எப்படி
எல்லாம் இருக்க மாட்டான் என்பதும் அதில் அடங்கிவிடும்.

குணம் ஒன்று இல்லாதவனை எப்படி சுட்டிக் காட்டுவது?

மாணிக்க வாசகர் சொல்கிறார்....

அவனை உணர முடியும், அறிய முடியாது. உணர்வதும் எளிதல்ல. அவன்
சிற்றம்பலத்தில் இருப்பான்.

ஒவ்வொருமுறை அவனை உணரும் போதும் புது புது உணர்ச்சிகள் தோன்றுகிறது; அது எப்படி என்றால்,

என் மனைவியிடம் ஒவ்வொரு முறை பெறும் இன்பம் போல் புதிது புதியதாய் இருக்கிறது" என்கிறார்.

அதே மனைவி தான், அதே இன்பம் தான் என்றாலும், ஏதோ ஒன்று புதியதாய் இருப்பது போல், இறை அனுபவமும் புதிது புதியதாய் தோன்றும் என்கிறார்.

அந்தப் பாடல்:




உணர்ந்தார்க்கு உணர்வரியோன் தில்லைச் சிற்றம்பலத் தொருத்தன் 
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாய் இக்கொடியிடைத்தோள்
புணர்ந்தால் புணருந்தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய்
மணந்தாழ் புரிகுழலாள் அல்குல்போல் வளர்கிறதே. 


பொருள்:

உணர்ந்தார்க்கு = உணர்ந்தவர்களுக்கு

உணர்வரியோன் = உணர்வதற்கு அரியவனான அவன்

தில்லைச் சிற்றம்பலத் தொருத்தன்  = தில்லை சிற்றம்பலத்தில் உள்ள ஒருவன்

குணந்தான் = அவனுடைய குணம்

வெளிப்பட்ட = வெளிப்படையாக உள்ள

கொவ்வைச் செவ்வாய் = சிவந்த இதழ்கள்

இக்கொடியிடைத் = கொடி போன்ற இடை

தோள் = அவளின் இனிய தோள்கள்

புணர்ந்தால் = சேர்ந்தால்

புணருந்தொறும் = ஒவ்வொரு முறை சேரும்போதும்

பெரும்போகம் = பெரிய சுகம்

பின்னும் புதிதாய் = மீண்டும் புதிது போல் இருக்குமே

மணந்தாழ்  = மணம் நிறைந்த

புரிகுழலாள் = கூந்தலை உடைய இவளின்

அல்குல்போல் = பெண்மையை போல்

வளர்கிறதே. = வளர்கின்றதே

பெண்ணின் சுகத்தையும் பேரின்ப சுகத்தையும் ஒன்றிணைத்து காட்டுகிறார் மணி வாசகப் பெருந்தகை....

1 comment:

  1. எந்த பதிகம் தலைப்பு சொல்லுங்கள்

    ReplyDelete