Thursday, July 19, 2012

இராமாயணம் - தசரதன் இராமனை காட்டுக்குப் போகச் சொல்லவில்லை


 இராமாயணம் - தசரதன் இராமனை காட்டுக்குப் போகச் சொல்லவில்லை


கைகேயி இரண்டு வரம் கேட்டாள். 

தசரதன் முதலில் இரண்டு வரத்தையும் தர மறுக்கிறான். 

கைகேயி பிடிவாதம் பிடிக்கிறாள். 

தசரதன் இறங்கி வருகிறான். "இரண்டாம் வரத்தை கேட்காதே, உன் மகன் பரதன் வேண்டுமானால் அரசாளட்டும், இராமன் காட்டுக்குப் போக வேண்டாம் " என்று கெஞ்சுகிறான்.

"மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
    மற ‘என்றான்."

கைகேயி மறுக்கிறாள். இரண்டு வரமும் வேண்டும் என்கிறாள்.

கடைசியில் தசரதன் "ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம்" என்கிறான். இவ்வரங்கள் என்று பன்மையில் சொல்லவில்லை. 

பின்னால், "என் சேய் காடாள" என்று சொல்கிறான். 

அதற்குப் பின் அவன் இறந்து போகிறான். அவன் இராமனை பார்க்கவே இல்லை.

கம்பனோ, வால்மீகியோ அந்த சந்திப்பை நடக்க விடவில்லை.

தசரதன் தன் வாயால் இராமனை கானகம் போகச் சொல்லவில்லை.

கைகேயிக்கும் தசரதனுக்கும் இடையே நடந்தது யாருக்கும் தெரியாது.

எனவே, தசரதன் இராமனை பார்த்து "நீ கானகம் போ" என்று சொல்லவில்லை.

தசரதன் அவன் மந்திரிகளிடமும் சொல்லவில்லை.

எனவே, இராமன் கானகம் போக வேண்டியது ஒரு அரசு ஆணை அல்ல.

கணவன் மனைவிக்கு இடையே நடந்த ஒரு உரையாடல்.

இராமனை, அவனிடமே, நேரடியாக,  கானகம் போகச் சொன்னது கைகேயிதான். தசரதன் அல்ல.

அதுவும் எப்படி சொல்கிறாள்...? ... வாங்கிய வரத்தோடு இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறாள்...

அது என்ன ? வாங்கிய வரம் ? வாங்காத வரம் ?



No comments:

Post a Comment