Monday, July 30, 2012

கம்ப இராமாயணம் - பிறவிப் பெருங்கடலை தாண்ட


கம்ப இராமாயணம் - பிறவிப் பெருங்கடலை தாண்ட


சீதை அனுமனை கேட்கிறாள் "நீ எப்படி இந்த கடலை தாண்டினாய்"

அனுமன்: "அம்மா, உன் துணைவனின் (இராமனின்) திருவடிகளை ஒரு மனத்தோடு சிந்திப்பவர்கள், முடிவே இல்லாத மாயா என்ற கடலையே கடந்து விடுவார்கள். அது போல, அந்த திருவடியை மனத்தில் நினைத்துக் கொண்டு இந்த கடலை தாண்டினேன்

பிறவிப் பெருங்கடலையே தாண்டும் போது, இந்த கருங் கடல் எம்மாத்திரம் 


சுருங்கு இடை ! உன் ஒரு துணைவன் தூய தாள்
ஒருங்குடைஉணர்வினோர், ஓய்வு இல் மாயையின்
பெருங் கடல்கடந்தனர் பெயரும் பெற்றிபோல்,
கருங் கடல்கடந்தனென், காலினால்' என்றான்.


சுருங்கு இடை !  = இளைத்த இடையை உடையவளே

உன் = உன்னுடைய


ஒரு துணைவன் = ஒரே துணைவனான , இராமனின்

தூய தாள் = தூய்மையான திருவடிகளை 

ஒருங்குடை = ஒன்றுபட்ட, ஒருமித்த, 

உணர்வினோர்,  = உணர்வை உடையவர்கள், பக்தர்கள், ஞானிகள்

ஓய்வு இல் = ஓய்வே இல்லாத, முடிவே இல்லாத 

மாயையின் = மாயையின் 

பெருங் கடல்கடந்தனர் = பெரிய கடலை கடந்து

பெயரும் = நீங்கி

பெற்றிபோல், =  செல்வதைப் போல்

கருங் கடல்கடந்தனென், = இந்த கருமையான கடலை கடந்தேன்

காலினால்' என்றான். = என் காலினால் (அவனுடைய காலினால் = திருவடியால் என்றும் பொருள் கொள்ளலாம்)


1 comment:

  1. Nice explanation.Good comparison.Yet to read many poems.will give my feed back:-)..

    ReplyDelete