Wednesday, August 22, 2012

கம்ப இராமயாணம் - பிழைகள்?


கம்ப இராமயாணம் - பிழைகள்?


நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே.

இந்த பாட்டில் என்ன பிழைகள் இருக்க முடியும் ?

நாடிய பொருள் கை கூடும் என்று சொல்லி விட்டால் அதில் ஞானம் , புகழ் எல்லாம் அடங்கும். ஞானமும் புகழும் உண்டாம் என்று அவற்றை மீண்டும் சொல்வது, "கூறியது கூறல்"என்ற பிழை. திருப்பி திருப்பி சொல்ற நீ.....

வேரியன் கமலை நோக்கு - தேன் இல்லாத தாமரையே கிடையாது என்பதால் இது தேவையற்ற அடை மொழி. 

நீடிய வரக்கர் சேனை - அரக்கர் சேனை அழிந்தது என்று கூறுவது சிறந்தது அல்ல. அரக்கர்கள் அழிந்தார்கள் என்று சொல்வது சிறப்பு. சேனை போனால் என்ன, இன்னொரு சேனை உண்டாக்கினால் போகுது ....

நீறுபட் டழிய - அமங்கல சொற்களை கூறுவது இலக்கிய மரபு அல்ல அதிலும் குறிப்பாக இறைவனை பற்றி புகழும் போது அமங்கல சொற்களை கூறுவது தவறு. 

தோள் வலி கூறுவோற்கே - இராமனுக்கு பல விசேஷ குணங்கள் உள்ளபோது , தோள் வலியை மட்டும் கூறுவது அவன் சிறப்பை குறைப்பது ஆகும்

இப்படி பலப் பல குற்றம் கண்டோர் உண்டு. 

குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருந்து இருக்கிறார்கள்....


2 comments:

  1. இதெல்லாம் ஒரு பொருட்டா? சும்மா வேலை இல்லாமல் குறை கண்டு பிடித்துக்கொண்டு!

    ReplyDelete
  2. குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனின், பெயரை சொல்லுபவருக்கும் குறை ஒன்றும் இல்லை.
    மனிதர்கள் பல வகை, ஒருவருக்கு செல்வம் வேண்டும்,(கர்மீக்கள்) ஒருவருக்கு அறிவு(ஞானிக்கள்), பின் ஒருவருக்கு புகழ் வேண்டும்(8 வகை சித்தி வேண்டும் யோகிகள்)
    பக்தர்கள் ( பகவான் ), இப்படி கம்பர் எல்லாருக்கும் சொல்கிறார்.

    ReplyDelete