Monday, August 20, 2012

தனிப் பாடல் - சொல்லின் செல்வி


தனிப் பாடல் - சொல்லின் செல்வி


காதலித்தது ஒரு பெண்ணை. மணந்தது இன்னொருத்தியை. 
அவன் காதலியோ மிக மிக அழகானவள். மனைவி அவ்வளவு அழகில்லை.
அவளை நினைத்து ஏங்குகிறான் காதலன்....


சொல்லியைச் சொல்லினமுதான செல்வியைச் சொற்கரும்பின்
வில்லியை மோக விடாய்தவிர்விப்பாளை விழியம்பினாற்
கொல்லியைக் கொல்லியம் பாவையொப்பாளைக் குளிரொற்றியூர்
வல்லியைப் புல்லிய கைக்கோவிவர் வந்து வாய்ப்பதுவே

சீர் பிர்த்தபின் 

சொல்லியை சொல்லின் அமுதான செல்வியை சொல் கரும்பின்
வில்லியை மோக விடாய் தவிர்ப்பாளை விழி அம்பினால்
கொல்லியை கொல்லி அம்  பாவை ஒப்பாளை குளிர் ஒற்றியூர்
வல்லியை புல்லிய கைக்கோ இவர் வந்து வாய்பதுவே

பொருள்

சொல்லியை = இனிய சொற்களை சொல்பவளை

சொல்லின் அமுதான செல்வியை = சொற்களின் அமுதான செல்வியையை

சொல் கரும்பின் வில்லியை = சொல்லை கரும்பு வில்லாகக் கொண்டவளை

மோக விடாய் தவிர்ப்பாளை = மோகம் என்ற தாகத்தை தீர்பவளை

விழி அம்பினால் = விழி என்ற அம்ம்பினால்

கொல்லியை = கொல்பவளை

கொல்லி அம்  பாவை ஒப்பாளை = கொல்லி மலை பாவை போன்றவளை

குளிர் ஒற்றியூர் வல்லியை = குளிர்ந்த ஒற்றியூர் என்ற ஊரில் உள்ள 
வல்லியையை

புல்லிய கைக்கோ = அணைத்த கைகளுகோ

இவர் வந்து வாய்பதுவே = இந்த பெண்ணும் (மனைவி?) வந்து வாய்த்ததுவே


1 comment:

  1. பாடல் எழுதிய விதம் நன்றாகத்தான் இருக்கிறது. இந்த உணர்ச்சியும் புரிந்து கொள்ளக் கூடியதே.

    ReplyDelete