Saturday, August 11, 2012

அபிராமி அந்தாதி - நின் திருநாமங்கள் தோத்திரமே


அபிராமி அந்தாதி - நின் திருநாமங்கள் தோத்திரமே


எனக்கு என்ன தெரியும்?

சிவந்த உன் மலர் போன்ற திருவடியையை தவிர ஒன்றும் தெரியாது.

நான் பாடியாது எல்லாம் ஒரு ஒரு பாட்டா ?

இருந்தாலும், என் பாடல்களுக்கு நடுவில் அங்கங்கே உன் பெயரை இட்டு நிரப்பி இருப்பதால், அவையும் தோத்திரப் பாடல்கள் என்று பெயர் பெற்று விட்டன.

என்று 

எவ்வளவு அடக்கத்தோடு சொல்கிறார் அபிராமி பட்டர். 

வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன்தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.

வல்லபம் ஒன்றறியேன் = சிறப்பான எதையும் நான் அறியமாட்டேன்

சிறியேன் = சிறியவனான நான்

நின் மலரடிச் = உன்னுடைய மலர் போன்ற மென்மையான

செம் பல்லவம் அல்லது = சிவந்த தளிர் போன்ற திருவடி அல்லாது

பற்று ஒன்றிலேன் = வேறு பற்று ஒன்றும் இல்லேன்

பசும் பொற் = சிறந்த பொன்னால் ஆன

பொருப்பு = மலை (மேரு மலையையை)

வில்லவர் தம்முடன் = வில்லாகக் கொண்ட சிவனுடன்

வீற்றிருப்பாய்; = வீற்று இருப்பாய்

வினையேன் = பாவ புண்ணியம் என்ற வினைகளால் சூழப்பட்ட நான்

தொடுத்த  = பாடிய, இயற்றிய

சொல் = பாடல்கள் (அதை பாடல் என்று கூட அவர் 
சொல்லவில்லை..."சொல்" என்கிறார்)

அவமாயினும் = நான்றாக இல்லாவிட்டாலும்

 நின்திருநாமங்கள் தோத்திரமே. = உன்னுடைய திருநாமம் அங்கங்கே 
வருவதால், அவை தோத்திரம் என்று அழைக்கப் படுகிறது...

என்ன அடக்கம்...என்ன பணிவு....என்ன ஒரு இனிமையான கவிதை..




2 comments:

  1. அற்புதமான பாடல்.

    அபிராமி பட்டார் மிகவும் பின் காலத்தைச் சேர்ந்தவரோ? பாடல் மொழியைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது.

    ReplyDelete