Thursday, September 13, 2012

கம்ப இராமாயணம் - உலக மாயை யாரால் விலகும்.


கம்ப இராமாயணம் - உலக மாயை யாரால் விலகும்.


இருட்டில் தெருவில் கிடக்கும் மாலை பாம்பு போலத் தெரியும்.
அது போல அஞ்ஞான இருட்டில் இருந்து நாம் காண்பது எல்லாம் வேறாகத் தெரியும்.

இந்த வேறாகத் தெரியும் மாயையை ஒருத்தரைப் பார்த்தால் விலகும்.

அவர் யாருன்னு கேட்டா, கையில் வில் ஏந்தி, இலங்கையில் சென்று சண்டை போட்டவர். 

அவரே  வேதங்களுக்கு எல்லாம் அந்தம் ஆனவர். வேதாந்தம் ஆனவர். 



அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறு பாடுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்அவர் என்பர் கைவி லேத்தி
இலங்கையில் பொருதா ரன்றே மறைகளுக் கிறுதி யாவார்.

சீர் பிரித்த பின்
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறு பாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரை கண்டால் அவர் என்பர் கை வில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி ஆனவர் 

பொருள் 

அலங்கலில் தோன்றும் = (பூ) மாலையில் தோன்றும்

பொய்ம்மை = பொய்யான மாயத் தோற்றம்

அரவு என = பாம்பு என


 பூதம் ஐந்தும் = ஐந்து பூதங்களும்

விலங்கிய விகாரப் பாட்டின் = ஒன்றோடொன்று கலந்து விகாரமாகி

வேறு பாடு உற்ற = வேறுபாடு உற்று

வீக்கம் = வீங்கிய, விரிந்த இந்த உலகம்

கலங்குவது எவரை கண்டால் = யாரைப் பார்த்து அந்த மாயை கலங்கி ஓடும் ?

அவர் என்பர் = அவரு என்பார்கள்

கை வில் ஏந்தி = கையில் வில் ஏந்தி

இலங்கையில் = இலங்கை சென்று

பொருதார் அன்றே = அன்று சண்டை போட்டவர்

மறைகளுக்கு இறுதி ஆனவர் = அவரே இந்த வேதங்களுக்கு எல்லாம் இறுதி ஆனவர் 

 

2 comments:

  1. கம்ப ராமாயணத்தில் இது யார் சொல்வதாக அமைந்திருக்கிறது?

    ReplyDelete
  2. மறைகளுக்கு இறுதி ஆனவர் என்றால் முக்திக்கு வழி என்று அர்த்தம் . வேதத்தில் இவ்வுலக சுகத்திற்காக நாம் செய்ய வேண்டிய கர்மாக்களை பற்றி சொல்லப்பட்டுள்ளது (SOP). அதில் பாவ புண்ணிய பலன் உண்டு. ஆனால் வேதாந்தம் ஞானம் அடையும் வழி. பலன்களுக்கு அப்பாற்பட்டது. அதனால் தான் ராமர் மறைகளுக்கு இறுதி ஆனவர் என்று கம்பன் கூறி உள்ளான். அருமையானப்பாடல். நன்றி.

    ReplyDelete