Friday, September 7, 2012

ஐங்குறுநூறு - அவன் தந்த நோய்


ஐங்குறுநூறு - அவன் தந்த நோய் 


அம்மா: என்னடி உடம்பு கிடம்பு சரி இல்லையா ? ஏன் ஒரு மாதிரி இருக்க ?

அவள்: இல்லையே, நான் நல்லாதான இருக்கேன்

அம்மா: என்ன நல்லா இருக்கியோ போ...சரியா சாப்டிறது இல்ல...தூக்கம் இல்ல...ஆளு நாளுக்கு நாள் மெலிஞ்சிக்கிட்டே போற...டாக்டர் கிட்ட கேட்டாலும் ஒண்ணும் இல்லேன்கிறார்...உன்னைய நாளைக்கு பூசாரிகிட்டதான் கூட்டிகிட்டு போய் மந்திரிச்சு தாயத்து வாங்கி கட்டணும்....

அப்ப அங்க வர்ற தோழி சொல்லுவாள் " உங்க அம்மாவுக்கு எங்க தெரிய போகுது இது காதல் நோய்..அவன் கிட்ட இருந்து வந்ததுனு சொல்லிறவா" .....

பாடல்:


அறியாமையின் ‘வெறி’ என மயங்கி
அன்னையும் அரும்துயர் உழந்தனள்; அதனால்
எய்யாது விடுதலோ கொடிதே – நிரைஇதழ்
ஆய்மலர் உண்கண் பசப்பச்
சேய்மலை நாடன் செய்த நோயே!

பொருள்

அறியாமையின் = அறியாமையால்

 ‘வெறி’ என மயங்கி = ஏதோ காத்து கருப்பு என்று நினைத்து

அன்னையும் = உன் அன்னையும் 

அரும்துயர் உழந்தனள்; = ரொம்ப மனக் கஷ்டப் படுகிறாள் 

அதனால் = அதனால்

எய்யாது விடுதலோ கொடிதே = சொல்லாமல் விடுவது ரொம்ப பாவம்

 நிரைஇதழ் = நிறைந்த இதழ்களை உடைய

ஆய்மலர் = அழகிய மலரைப் போன்ற

 உண்கண் பசப்பச் = உன் கண்கள் பசலை நிறம் படிய (சோர்ந்து போக )

சேய்மலை = தூரத்தில் உள்ள மலை  

நாடன் செய்த நோயே! = நாட்டில் உள்ளவன் செய்த நோயே 

1 comment:

  1. ஜொள்ளு என்பது ஆண்டாண்டு காலமாக நிலைத்து வந்திருக்கிறது.

    "ஆணுன்னும் பொண்ணுன்னும் ஏன் படைச்சான்?
    ஆளுக்கோர் ஆசையை ஏன் படைச்சான்?
    இல்லன்னா உலகமே இல்லை புள்ள,
    இது கூடத் தெரியலை, என்ன புள்ள?"

    ReplyDelete