Wednesday, October 24, 2012

திருவாசகம் - பைத்தியம் பிடிக்க

திருவாசகம் - பைத்தியம் பிடிக்க

நீங்கள் பைத்தியம் ஆனால் அதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்வீர்களா ? கிறுக்கு பிடிபதென்ன அவ்வளவு சிறந்த விஷயமா ?

உங்களை யாராவது மூச்சு முட்ட வெள்ளத்திற்குள் அமுக்கினால், நீங்கள் அவர்களுக்கு நன்றி சொல்வீர்களா ?

உங்களின் உறுதியான, தைரியாமான, கல்லை போல் கடினமான உள்ளத்தை யாராவது மாற்றி, மென்மையாகச் செய்தால், நீங்கள் அதற்கு நன்றி சொல்வீர்களா ?


மாணிக்க வாசகர் சொல்கிறார். 

பாடல் 


வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர் புக்குச்சிற்றம் பலமன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.

பொருள்


வல்லாளன் = வல்லவன்

தென்னன் = தென்னாடுடையவன்

பெருந்துறையான் = திருப்பெருந்துறை என்ற ஊரில் உள்ளவன்

பிச்சேற்றிக் = என்னை பைத்தியமாக ஆக்கி, பித்தத்தை மேலும் ஏற்றி 
(பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் - மணிவாசகம்)

கல்லைப் பிசைந்து = கல் போல இருந்த என் மனதை பிசைந்து

கனியாக்கித் = கனி போல் மென்மையாக்கி (நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து 
உருக என்பார் அருணகிரியார்)

தன்கருணை = தன்னுடைய கருணையாகிய

வெள்ளத் தழுத்தி = வெள்ளத்தில் அழுத்தி

வினைகடிந்த = என்னுடைய நல் வினை , தீவினை இரண்டையும் தடுத்த 

வேதியனைத் = வேதம் அறிந்தவனை, வேதத்தின் உட்பொருளை

தில்லை நகர் புக்குச் = தில்லை நகரத்தில் சென்று

சிற்றம் பலமன்னும் = சிற்றம்பலத்தில் வசிக்கும்  

ஒல்லை = விரைந்து செல்லும் (ஐயனை ஒல்லை வா என்று அழைப்ப 
போன்றதம்மா - கம்ப இராமாயணம்)

விடையானைப் = எருதை வாகனமாய் கொண்டவனை

பாடுதுங்காண் அம்மானாய். = அம்மானை விளையாட்டு பாடி நாம் போற்றுவோம்

2 comments:

  1. some times i feel like hearing kribanandha vaariyar's speech when i read yr blog. good.

    ReplyDelete
  2. கல்லைப் பிசைந்து கனியாக்கி - ஆஹா, அருமை!

    ReplyDelete