Tuesday, November 20, 2012

இராமாயணம் - அழகிய எமன்


இராமாயணம் - அழகிய எமன் 


எமன் எப்படி இருப்பான் ? கருப்பா, குண்டா, சிவந்த கண்கள், பெரிய பெரிய பற்கள், கலைந்த தலை, கையில் பாசக் கயறு, இன்னொரு கையில் கதை என்று பார்க்கவே பயங்கரமாக இருப்பான் அல்லவா ?

அப்படித்தான் நானும் நினைத்து கொண்டிருந்தேன்...ஆனால் அப்படி அல்ல, எமன் ரொம்ப அழகாக இருக்கிறான்....சொல்லப் போனால் எமன் ஆண் கூட அல்ல ஒரு பெண்...அழகிய மேகலை உடுத்துக்கொண்டு, தேர் தட்டு போன்ற இடுப்பு, கூறிய வாள் போன்ற நெடிய கண்கள் இரண்டு, ஒளி வீசும் இரண்டு மார்பகங்கள், அடக்கமான ஒரு புன்னகை என்று இத்தனயும் கொண்டு வந்தது அந்த கூற்றம். 

ஆமா, அந்த கூற்றுவனுக்கு இத்தனையும் வேண்டுமா...இதுல ஒண்ணு இருந்தா கூட போதுமே , உயிரை எடுக்க ....

என்று சீதையையை பார்த்து விட்டு வந்த இராமன் காதல் வேதனையில் புலம்புகிறான்....

பாடல் 

வண்ண மேகலைத் தேர் ஒன்று. வாள் நெடுங்
கண் இரண்டு. கதிர் முலைதாம் இரண்டு.
உள்நி வந்த நகையும் என்று ஒன்று உண்டால்;
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ?
 
பொருள் 


வண்ண மேகலைத் = வண்ண வடிவமான மேகலை

தேர் ஒன்று. = தேர் போன்ற இடுப்பு

வாள் = கூரிய வாள் போன்ற

நெடுங் கண் இரண்டு.= நெடிய கண்கள் இரண்டு

கதிர் = கதிர் போல் கூர்மையான

முலைதாம் இரண்டு. = மார்பகங்கள் இரண்டு

உள்நி வந்த நகையும் = அடக்கமான புன்னகை

என்று ஒன்று உண்டால்; = என்று ஒன்று உண்டால்

எண்ணும் = நினைத்து வந்த 

கூற்றினுக்கு = கூற்றுவனுக்கு

இத்தனை வேண்டுமோ? = இத்தனையும் வேண்டுமா (இதில் ஒண்ணு போதாதா ?)

போதும்னு நினைக்கிறேன்....

2 comments:

  1. இது வரை கேள்விப் படாத பாடல். Good one.

    ReplyDelete
  2. தூளான பாட்டு. இந்த மாதிரி பொண்ணுங்க வந்தா பசங்க எல்லாம் சாக வேண்டியதுதான்!

    ReplyDelete