Tuesday, November 20, 2012

அபிராமி அந்தாதி - உதிக்கின்றதே


அபிராமி அந்தாதி - உதிக்கின்றதே 

அந்தாதி என்றால் ஒரு பாடலின் இறுதி வார்த்தையயை  கொண்டு அடுத்த பாடலின் முதல் வார்த்தை தொடங்க வேண்டும். தமிழில் நிறைய அந்தாதிகள் உண்டு. அபிராமி அந்தாதியின் சிறப்பு முதல் பாடலின் முதல் வார்த்தையும் நூறாவது பாடலின் கடைசி வார்த்தையும் ஒன்றாக இருப்பது. 

உதிக்கின்ற செங்கதிர் என்று முதல் பாடல் ஆரம்பிக்கிறது. 

நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே என்று நூறாவது பாடல் முடிகிறது.

பூ சரத்தை தொடுத்துக்கொண்டே போய் கடைசியில் இறுதிக் கண்ணியையை முதல் வார்த்தையோடு சேர்த்து அந்த பூ சரத்தை மாலையாக செய்து விட்டார் பட்டர். 

முதல் பாடல் 

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை 
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

நூறாவது பாடல்

குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி 
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும் 
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும் 
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!






2 comments:

  1. அது சரி. ஆனால் இந்த இரண்டு பாட்டுக்கும் விளக்கம்?

    ReplyDelete