Thursday, December 27, 2012

இராமாயணம் - உரு பெற்ற மன்மதன்


இராமாயணம் - உரு பெற்ற மன்மதன் 


இராமனைப் பார்த்த சூர்பனகை முதலில் அவன் மன்மதனோ என்று சந்தேகப் பட்டாள். "இருக்காது, மன்மதனுக்குத்தான் உருவம் இல்லையே...இவனுக்கு உருவம் இருக்கிறதே, எனவே இவன் மன்மதனாய் இருக்க முடியாது " என்று நினைத்தாள். இருந்தாலும் அவளுக்கு சந்தேகம் தீரவில்லை. ஒரு வேளை அந்த மன்மதன் நல்ல தவம் செய்து, சாப விமோசனம் பெற்று, அதன் மூலம் எல்லோரும் காணும் உருவத்தை பெற்றுவிட்டானோ என்று மீண்டும் நினைக்கிறாள். 

ஜொள்ளு யாரை விட்டு வைத்தது....

பாடல்



கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால்
இற்றவன், அன்றுதொட்டு இன்றுகாறும், தான்
நல் தவம் இயற்றி, அவ் அனங்கன், நல் உருப்
பெற்றனனாம்' எனப் பெயர்த்தும் எண்ணுவாள். 

பொருள்

கற்றை = கத்தை கத்தையாக 

அம் சடையவன் = அந்த சடையனான (சிவன்)

கண்ணின் காய்தலால் = கண்ணால் எரித்ததால் 

இற்றவன் = இற்றுப் போனவன், உருவம் இழந்தவன் (மன்மதன்) 

அன்றுதொட்டு இன்றுகாறும் = அன்றிலிருந்து இன்று வரை 

தான் = அவன்

நல் தவம் இயற்றி = நல்ல தவம் செய்து 

அவ் அனங்கன் = அந்த உருவம் இல்லாதவன் (மன்மதன்) 

நல் உருப் பெற்றனனாம் = நல்ல உருவத்தை அடைந்தான் 

' எனப் பெயர்த்தும் எண்ணுவாள்.  = என்று மீண்டும் எண்ணுவாள்

No comments:

Post a Comment