Monday, January 14, 2013

திருமந்திரம் - புலன்களை அடக்காதீர்கள்


திரு மந்திரம் - புலன்களை அடக்காதீர்கள் 


மெய், வாய், விழி, நாசி, செவி என்ற ஐந்து புலன்களும் நம்மை படாத பாடு படுத்துகின்றன. 

பார்ப்பது எல்லாம் வேண்டும் என்கிறது மனம்.

ருசியானவற்றை கண்டால் ஜொள்ளு விடுகிறது நாக்கு,  

சினிமா பார்க்க வேண்டும், புதுப் புது இடங்களை பார்க்க வேண்டும் என்று கண் அலை பாய்கிறது

பாடலை, இசையையை கேட்க வேண்டும் என்று காது ஆசைப் படுகிறது....

ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்று எல்லா மதங்களும் போதிக்கின்றன. 

ஆனால், ஐம்புலன்களை அடக்க முடியுமா ? அடக்கியபின் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

திருமூலர் ரொம்ப ப்ராக்டிகலான ஆளு. 

பாடல் 

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்,
அஞ்சும் அடக்கும் அறிவறி வார்இல்லை,
அஞ்சும் அடக்கின் அசேதனமாம் என்றிட்(டு)
அஞ்சும் அடக்காத அறிவறிந்தேனே

பொருள்

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் = ஐம்புலன்களை அடக்கு அடக்கு என்று சொல்லுபவர்கள் அறிவு இல்லாதவர்கள் 

அஞ்சும் அடக்கும் அறிவறி வார்இல்லை, = ஐம்புலன்களை அடக்கும் அறிவு யாருக்கும் இல்லை

அஞ்சும் அடக்கின் = ஐம்புலன்களை அடக்கினால்

அசேதனமாம் என்றிட்(டு = அது அறிவில்லாத்தனம்  என்று அறிந்து

அஞ்சும் அடக்காத அறிவறிந்தேனே = ஐம் புலன்களை அடக்காத அறிவை அடைந்தேன்

ஐந்தையும் அடக்காமல், அவற்றின் வழியே சென்று அவற்றை வென்று வாழ்கையை இரசியுங்கள்....

இந்த பொங்கல் நாள் போலவே எல்லா நாளிலும் இன்பம் பொங்கட்டும் 

1 comment:

  1. "அப்படி அடக்காமலேயே என்னால் அறிவு அடைய முடியும்" என்கிறாரா? பெரிய ஆளுதான்.

    ReplyDelete