Friday, January 25, 2013

சிலப்பதிகாரம் - பார்த்தால் பசி தீரும்


சிலப்பதிகாரம் - பார்த்தால் பசி தீரும் 


உலகத்தில் உள்ள பொருள்களிலேயே அருமையான பொருள் நீ என்று அமரர்கள் உன்னை தங்கள் கண்களால் கண்டு பசி ஆறுகிறார்கள்.
நீயோ, பசியே இல்லாமல், இந்த உலகம் அனைத்தையும் உண்டாய். 
அப்படியும் பசி தீர வில்லை என்று வெண்ணையை  வேறு களவாடி உண்கிறாய்.
சரி அதுதான் போனால் போகிறது என்று பார்த்தால், உண்ட வெண்ணையும் துளசியாய் மாறித் தோன்றுகிறது...தல சுத்துதுபா உன்னோட....

பாடல் 

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

பொருள் 

அறுபொருள் = அருமையான பொருள் 

இவனென்றே = இவன் என்றே 

அமரர் = தேவர்கள் 

கணந் தொழுதேத்த = ஒவ்வொரு கணமும் தொழுது ஏத்த 

உறுபசி = பெரிய பசி 

யொன் றின்றியே = ஒன்று இன்றியே 

உலகடைய உண்டனையே = உலகம் பூராவையும் உண்டாயே 

உண்டவாய் = அப்படி உண்டது போதாது என்று 

களவினான் = களவாண்டு 

 உறிவெண்ணெ யுண்டவாய் = உரியில் இருந்து வெண்ணையை உண்டாய் 

வண்டுழாய் மாலையாய் = வண்டு நிறைந்த துழாய் (துளசி) மாலையை அணிந்தவனே 

மாயமோ மருட்கைத்தே = இது என்ன மாயமோ, மயக்கமாக இருக்கிறதே 

No comments:

Post a Comment