Tuesday, January 8, 2013

திருக்குறள் - அறத்தின் பயன்


திருக்குறள் - அறத்தின் பயன் 



அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைப்
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

அறத்தின் பயன் இது என்று சொல்ல வேண்டாம். பல்லக்கில் செல்பவனையும் அதை தூக்குபவனையும் பாத்தாலே புரியும். 

இந்த குறள் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. 

அது என்ன பல்லக்கு தூக்குவது பாவமா ? பல்லக்கில் செல்பவர்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்களா (அறத்தின் வழி நிர்ப்பவர்களா ?). பல்லக்கில் போவது என்பது எப்போதும் நிரந்தரமாய் இருக்குமா ? அது எப்படி வள்ளுவர் அப்படி சொல்லலாம் என்று ஒரு கோஷ்டி. 

இல்லை இல்லை அவர் அப்படி சொல்லி இருக்க மாட்டார். 

அறத்தாறு என்றால் அறத்து + ஆறு அதாவது அறத்தின் வழி என்று தான் பொருள் வருமே தவிர அறத்தின் பயன் என்று பொருள் வராது. 

அப்படி பார்த்தால் மீதி உள்ள பாடல் பொருள் சரியாக வரவில்லையே என்றால் அதற்க்கு குரலை சற்றே மாற்றி சொல்கிறார்கள்:

அறத்தாறு இதுவென வேண்டா  செவிகைப்ப 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

செவி கைப்ப என்றால் காது போருக்க முடியாத படி பேசுவது. அர்த்தம் இல்லாமல் கத்தும் ஒருவனுக்கும் அதை பொறுத்து போகும் மற்றோருவனுக்கும் இடையில் போய் எது சரி எது தவறு என்று சொல்ல வேண்டாம் என்று அர்த்தம் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். 

சத்தம் போடுபவன் ஒன்று periya அதிகாரியாய் இருக்க வேண்டும், அல்லது பணம் படைத்தவனாய் இருக்க வேண்டும். அந்த சுடு சொற்களை பொறுத்து கொள்பவன்  ஒன்று உண்மையிலேயே தவறு செய்திருக்க வேண்டும் அல்லது பதில் பேச முடியாத பலவீனனாய் இருக்க வேண்டும். எப்படி இருப்பினும் அவர்கள் இடையே சென்று அறம் இது என்று சொல்வது எந்த பயனையும் தரப் போவது இல்லை என்று வாதிடுகிறார்கள்.

செவிகைப்ப என்ற சொல்லை வள்ளுவர் இன்னொரு குறளிலும் பயன் படுத்தி இருக்கிறார். 

சிவிகை என்ற சொல்லை எங்குமே பயன் படுத்தவில்லை 

முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன். எது சரி என்று படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் .

2 comments:

  1. மிக நல்ல விளக்கம். நன்றி. "செவி கைப்ப" என்றால், இலக்கணப்படி சரியாக வருகிறதா?

    ReplyDelete
  2. குறள் 37: 
    அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

    எம்எஸ்கே சாமி விளக்கம்:
    அறம் என்று சொல்லப்படுகின்ற விடயமானது மனிதனது ஒவ்வொரு செயல்களிலும் அது அடங்கும். அத்தகைய பெருந்தன்மையான குணம் கொண்ட மனிதர்களிடம் மட்டுமே அறம் இருக்கும். அது ஆற்றைப் போன்றது. ஆறு எப்படி உருவாகிறது. நிலத்திலிருந்து நீர் ஊற்றுக்கள் உருவாகி சிறிய ஓடையாக மாறி பின்னர் அது ஆறாக ஓடுகின்றது. பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய உடலெனும் நிலம் அதில் மனம் என்னும் ஊற்று ஆகும். மனமானது ஊற்றுநீர் போல பலவகையான கட்டுக்கடங்காத எண்ணங்களையும் ஆசைகளையும் வைத்துக் கொண்டுள்ளது. அதில் ஒருவன் அறம் என்ற ஊற்றை மட்டுமே எடுத்து தனது மனதை பக்குவப்படுத்தி வாழக்கூடிய தன்மையையே பெற முயற்சி செய்ய வேண்டும். எனவே இதை ஆறு என்ற சொல் மனிதனது ஆறிவையும் குறிக்கின்றது. மேலும் ஆறு என்றால்
    ஆற்றையும் குறிப்பதால் இப்படி எண்ணத் தோன்றுகிறது. அதனால் அறத்தாறு என்றார் எனலாம்.

    1.அறத்தாறு:-மனிதர்களது வாழ்க்கையில் அறநெறியை தவறாமல் கடைபிடித்தால் உலகம் போற்றப்படும் ஞானிகள் ஆவார்கள். உதாரணமாக பதினெட்டு சித்தர்கள் ஆவார்கள். ஒரு சாதாரண மனிதனால் எவ்வளவு ஒழுக்கமாக அல்லது அறநெறியில் வாழவேண்டும்/ கடைபிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலும் அதற்கு பல வகையில் இடையூறுகள் வந்து சேரும் என்பது அணுபவப்பூர்வமான உண்மை ஆகும். அதனையும் மீறி ஒவ்வொரு செயலும் அறவழியினுடைய செயலாக இருக்க வேண்டும்.

    2.இதுவென வேண்டா:- நாம் செய்கின்ற செயல் இது அறவழியை தொடர்புடையதுதானா, இதை செய்யலாமா வேண்டாமா என ஒவ்வொருவரும் நினைத்து ஆராய்ந்து பார்த்து அறத்திற்கு புறம்பான வேண்டாத செயல்களை செய்யாதே. அதற்குத்தான் ஆறறிவை கொடுத்துள்ளான்.

    3.சிவிகை பொருத்தானோடு:- சிவிகை என்றால் பல்லக்கு. ஒருவனை அந்த பல்லக்கில் அமர வைத்து கீழே 4 பேர் தூக்கிச் செல்வார்கள். அக்காலத்தில் அரசன் மட்டுமே பல்லக்கில் வைத்து அடிமைகள் தூக்கி செல்வார்கள். ஆனால் அறநெறியை பின்பற்றி வாழ்ந்தால் அறவழியில் வாழ்ந்த ஞானியை ஒவ்வொருவரும் தனது மனதில் வைத்து வழிபட்டு வணங்குவது என்பது பல்லக்கில் வைத்து தூக்கி செல்லக்கூடியது போன்ற செயலாகும் எனலாம்..

    4.ஊர்ந்தான் இடை:- புழு பூச்சி இனங்கள் ஊர்ந்து செல்லும் அதேபோல் பல்லக்கை தூக்கி செல்லும் அடிமைகள் படும் கஷ்டங்கள் மனிதன் செய்யும் பாவச்செயல்களைப் பொருத்து மாறுபடும் என்பதே. பல்லக்கை தூக்கி செல்லும் அடிமைகள் படும் கஷ்டங்களுக்கு காரணம் அறன் வழிதவறியதே என நினைக்கத் தோன்றுகிறது.

    உட்கருத்து:-
    சாதாரண மனிதனாக பிறந்து ஞானியாக மாற அறவழியை பின்பற்ற வேண்டும்.


    குறளமுதம் எம்எஸ்கே சாமி கோவை

    ReplyDelete