Thursday, February 21, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - வேதங்களை காப்பவர்



இராமானுஜர் நூற்றந்தாதி - வேதங்களை காப்பவர் 


வேதம்.

எப்போது அது எழுதப் பட்டது, யார் அதை எழுதினார்கள் என்று தெரியாது.

காகிதமும், அச்சுக் கலையும் , கணணிகளும் இல்லாத காலத்தில் இருந்து அந்த வேதங்களை இன்று வரை நமக்காக பத்திரப் படுத்தி கொண்டு வந்து தந்தது யார் ?

சிதைந்தும் காணமல் போகவும் எவ்வளவோ காரணங்கள் இருந்தும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படாமல் பத்திரமாக வந்து சேர்ந்து இருக்கிறது என்றால் அது யாரால் ?

எத்தனையோ நல்லவர்கள், பெரியவர்கள் இனி வரும் காலத்தின் சந்ததிகளுக்கும் பயன் பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அந்த வேதங்களை காத்து நம்மிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள்.

அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நாம் நன்றி சொல்வோம்.

பாடல்

இறைவனைக் காணும் இதயத் திருள்கெட ஞானமென்னும்
நிறைவிளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்
துறையவைத் தாளும் இராமா னுசன்புகழ் ஓதும்நல்லோர்
மறையினைக் காத்த இந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே.

 சீர் பிரித்த பின்

இறைவனை காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும் 
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர் 
மறையினை காத்த இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே 

பொருள்





இறைவனை காணும் = இறைவனை காணும்

இதயத்து இருள் கெட = இதயத்து இருள் விலக

ஞானம் என்னும் = ஞானம் என்ற

நிறை விளக்கு ஏற்றிய = நிறைவான விளக்கை ஏற்றிய

பூதத் திருவடி தாள்கள் = பூதத்தாழ்வாரின் திருவடிகளை

நெஞ்சத்து உறைய வைத்து = மனதில் தங்க வைத்து

ஆளும் = ஆட்சி செய்யும்

இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர் = இராமானுசனின் புகழை போற்றும் நல்லவர்கள் 

மறையினை = வேதங்களை

காத்த = காப்பாற்றி

இந்த மண்ணகத்தே = இந்த உலகில்

மன்ன வைப்பவரே = நிலை நிறுத்தி வைப்பவரே



1 comment:

  1. I liked the 3rd paragragh very much-uyarntha nookam.Inda Blog ya kodutha unakkum romba Nandri.

    ReplyDelete