Tuesday, February 26, 2013


அபிராமி அந்தாதி - அறிதலும் புரிதலும்

இறைவனை அறிந்து கொள்ள முடியுமா ? அறிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ? அறிந்த பின் அவர்கள் என்ன செய்தார்கள் ? அறியும் முன் என்ன செய்தார்கள் ? இறைவனை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் என்ன வித்தியாசம் ?

பட்டர் சொல்கிறார்

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

பொருள்





அறிந்தேன் = நான் அறிந்து கொண்டேன். கேட்டேன் என்றோ, கண்டேன் என்றோ சொல்லவில்லை. அறிந்தேன் என்கிறார்.

எவரும் அறியா மறையை = யாரும் அறியாத இரகசியத்தை

அறிந்துகொண்டு = அறிந்து கொண்ட பின்

செறிந்தேன் = செறிதல் என்றால் அடைக்கலம் வேண்டிப் புகுதல் என்று பொருள்

நினது திருவடிக்கே = உன்னுடைய திருவடிகளே சரணம் என்று வந்தேன்

திருவே = மங்களமானவளே

வெருவிப் = பயந்து, மயங்கி

பிறிந்தேன் = பிரிந்தேன்

நின் அன்பர் = உன்னுடைய அன்பர்களின்

பெருமை எண்ணாத = பெருமை அறியாத

கரும நெஞ்சால் =   தீவினை புரியும் மனத்தால்

மறிந்தே விழும் = குப்புற விழும்

நரகுக்கு உறவாய = நரகத்திருக்கு உறவான

 மனிதரையே = மனிதர்களையே


 இறைவனை அறியாதவர்கள் மீண்டும் மீண்டும் நரகத்தில் விழுவார்கள். அப்படி விழும்  மனிதரோடு சேர்ந்து இருப்பார்கள். 

இறைவனை அறிந்தவர்கள் அவன் திருவடிகளை சரண் அடைவார்கள், அவன் அடியாரோடு ஒன்றி இருப்பார்கள். 



No comments:

Post a Comment