Thursday, March 21, 2013

அபிராமி அந்தாதி - எமக்கு என்று வைத்த செல்வம்


அபிராமி அந்தாதி - எமக்கு என்று வைத்த செல்வம்

நமக்கு என்ன வேண்டும் இந்த வாழ்க்கையில் என்று கேட்டால் பணம், பொருள், புகழ், ஆரோக்கியம் என்று நாம் அடுக்கிக்கொண்டே போவோம்...அபிராமி பட்டர் சொல்கிறார்.


நமக்கு என்ன வேண்டும்...அவளோட பாதங்கள், அவளுடைய கைகள், அழகான அவள், அப்புறம் அவளோட பெயர், ...எல்லாத்துக்கும் மேல அவளோட கண்கள் ...இதுக்குமேல வேற என்ன வேணும் ....

அவஅணியும் ள் வேண்டும், அவளோட கைகள் , பாதம் , பெயர், கண்ணு எல்லாம் அவருக்குன்னு கிடைத்த பொக்கிஷமாம்....

 பாடல்


தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே


பொருள்






தாமம் கடம்பு = தாமம் என்றால் மாலை அவள் அணிவது கடம்ப மாலை

படை பஞ்சபாணம் = அவள் வைத்திருக்கும் படையோ ஐந்து அம்புகள்

தனுக் கரும்பு = வில்லோ கரும்பால் ஆனது (தனு = வில்)

யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது = வயிரவர் அவளை புகழும் பொழுதோ நள்ளிரவு

 எமக்கு என்று வைத்த = எங்களுக்கு என்று வைத்த

சேமம் = சேமம் என்றால் சேமித்து வைத்த பொக்கிஷம், நிதி, செல்வம்.

திருவடி = அவளுடைய திருவடி

செங்கைகள் நான்கு = அவளுடைய நான்கு சிவந்த கைகள்

ஒளி செம்மை அம்மை = சிவந்த அழகான அவள்

நாமம் திரிபுரை = திரிபுரை என்ற அவளின் நாமம்

 ஒன்றோடு இரண்டு நயனங்களே = நெற்றியில் உள்ள ஒரு கண்ணோடு முகத்தில் உள்ள இரண்டு கண்களும்

அவளை விட வேறு ஒரு செல்வம் இருக்குமா என்ன ?




1 comment: