Saturday, May 4, 2013

இராமாயணம் - அவதார நோக்கமும் செயலும்

இராமாயணம் - அவதார நோக்கமும் செயலும் 


இராமயணத்தை படிக்கும் போது, அதன் கதை போக்கிலேயே படித்துக் கொண்டு போவது ஒரு சுவை.

அதை விடுத்து, இந்த கதை ஏன் இப்படி போகிறது, இதுவே வேறு மாதிரி போனால் எப்படி இருக்கும் ? இந்த கதா பாத்திரம் எதற்கு இருக்கிறது ? அது இல்லாவிட்டால் என்ன என்று கேள்வி கேட்டு விடை தேடினால் அதில் இன்னும் சுவை கூடும்.

அப்படி சிந்தித்த போது எனக்குள் ஒரு கேள்வி....இந்த வாலி வதம் எதற்கு ? அதுவும் மறைந்திருந்து கொல்ல வேண்டிய அவசியம் என்ன ?

இராமன் நேரடியாக வாலியிடம் சென்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால், இராவணன் கதறிக் கொண்டு வந்து சீதையை ஒப்படைத்திருப்பான்.

அப்புறம் இராவணனோடு நிதானமாக சண்டை போட்டு அவனை கொன்றிக்கலாம்.

அல்லது வாலியின் துணையோடு நேரே இலங்கை போய் இராவணனை கொன்று சீதையை சிறை மீட்டிருக்கலாம். சுக்ரீவனிடம் உதவி கேட்கலாம் என்றால் வாலியிடம் உதவி கேட்பதில் என்ன தவறு ?

வாலி என்ற பாத்திரம் இல்லாவிட்டால் காவிய போக்கில் என்ன நிகழ்ந்திருக்கும் ?

வாலி வதத்தின் மூலம் கம்பன் என்ன சொல்ல வருகிறான் ? அதுவும் மறைந்திருந்து கொல்வதற்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்க வேண்டும் அல்லவா ?

ஏன் இராமனை குற்றவாளி கூண்டில் கம்பன் நிறுத்தி வாலி வாயால் அத்தனை கேள்விகளை கேட்க்க வைத்தான் ? கேட்ட பின்னும், வாய் மூடி மெளனமாக இராமனை நிற்க வைத்தான் ?

என்ன காரணம் ? என்ன காரணம் ? என்ன காரணம் ?

யோசித்துப்  பாருங்கள். உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் ? சுவாரசியமாக இருக்கும்

1 comment:

  1. கம்பன் மற்றுமல்ல, வியாசரும் வாலி என்ற பாத்திரத்தை உண்டு செய்தார்தானே?

    அதை நான் இது வரை சும்மா ஒரு கிளைக்கதை என்றுதான் எண்ணியிருக்கிறேன். அதைவிட சுவையான விளக்கம் கிடைத்தால் நின்கு ரசிக்கலாம். எழுதுக.

    ReplyDelete