Thursday, June 6, 2013

பிரகலாதன் இறை தத்துவம் - வேறு உணர் பித்தர்

பிரகலாதன் இறை தத்துவம் - வேறு உணர் பித்தர் 


வேதங்களின் முடிந்த முடிவுகளுக்கு அப்பாற்பட்டவன் அவன்.

அவனை யார் அறிவார்கள் ?

தன்னை தான் அறிந்த வித்தகர்கள் அவனை அறிவார்கள்

வேதம் என்ன சொல்லுகிறது ?

அவன் தான் ஆதி, அவன் தான் அந்தம், அவனே எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழிப்பவன் என்று வேதம் கூறுகிறது.

அப்படி அல்ல என்று சொல்லும் பித்தர்களும் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பித்தர்கள் வீடு பேறு பெற மாட்டார்கள்.

பாடல்

சித்து என அரு மறைச் சிரத்தின் தேறிய
தத்துவம் அவன்; அது தம்மைத் தாம் உணர்
வித்தகர் அறிகுவர்; வேறு வேறு உணர்
பித்தரும் உளர் சிலர்; வீடு பெற்றிலார்.


பொருள் 

 

சித்து என = சித்து என்று

அரு மறைச் சிரத்தின் தேறிய =  அருமையான மறைகள்  (வேதங்களின்)அறிந்து தெளிந்து கூறிய
 
தத்துவம் அவன் = தத்துவம் அவன்

அது தம்மைத் = அதனை

தாம் உணர் வித்தகர் அறிகுவர் = தன்னை தான் உணர்ந்த வித்தகர்கள் அறிவார்கள்

வேறு வேறு உணர் பித்தரும் உளர் சிலர் = அதை விடுத்து வேறு வேறு விதமாக அறியும் பித்தர்களும் உள்ளனர்  

வீடு பெற்றிலார். = அவர்கள் வீடு பேறு பெற மாட்டார்கள்


No comments:

Post a Comment