Friday, June 7, 2013

பிரகலாதன் - இறை உணர்வு - உணரத் தேயுமோ ?

பிரகலாதன் - இறை உணர்வு - உணரத் தேயுமோ ?




' "மூவகை உலகும் ஆய், குணங்கள் மூன்றும் ஆய்
யாவையும் எவரும் ஆய், எண் இல் வேறுபட்டு,
ஓவல்இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை
தேவரும் முனிவரும்உணரத் தேயுமோ ?

ஒரு பொருளை நாம் மனதால் உணர முடியும் என்றால் அது நம் மனதுக்கு உட்பட்டது. அது நம் மனதிற்குள் அடங்கி விடுகிறது. 

ஏன் எல்லாம் நம் மனதிர்குள் அடங்க வேண்டும் ? அப்படி ஒன்றும் விதி இல்லையே ?

இறைவன் நம் நினைவுக்கும் மனதுக்கும் எட்டாதவன். 

அவன் மூன்று உலகும் ஆய், மூன்று குணங்களும் ஆய், எல்லா பொருளும் ஆய், எல்லோருமாய் ஆய், கணக்கில் அடங்காத அளவு வேறு வேறு உருவாக ஆகி, நீங்குதல் இல்லாத ஒரே நிலையில் உள்ளவன். 

அவனை தேவரும், முனிவரும் மனதிற்குள் அடங்கும்படி தேய்ந்து சின்னதாக ஆகாதவன். 

' "மூவகை உலகும் ஆய், குணங்கள் மூன்றும் ஆய்
யாவையும் எவரும் ஆய், எண் இல் வேறுபட்டு, 
ஓவல்இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை
தேவரும் முனிவரும்உணரத் தேயுமோ ? 


பொருள் 



மூவகை உலகும் ஆய் = மேல் உலகம், பாதாள உலகம், பூலோகம் என்று மூன்று உலகங்களும் ஆகி 

குணங்கள் மூன்றும் ஆய் = சாத்வீக ரஜோ மற்றும் தமோ குணங்கள் ஆகி 

யாவையும் எவரும் ஆய் = எல்லா ஜடப் பொருளும் ஆகி, எல்லா உயிர் பொருளும் ஆகி 

எண் இல் வேறுபட்டு = கணக்கில் அடங்காத விதமாய் வேறுபட்டு 
 
ஓவல்இல் ஒரு நிலை ஒருவன் = நீங்குதல் இல்லாத ஒரே நிலையில் உள்ளவன் 

செய்வினை = செய்கின்ற வினைகளை 

தேவரும் முனிவரும்உணரத் தேயுமோ  = தேவர்களும், முனிவர்களும் உணரத் தேய்ந்து சுருங்குமோ. சுருங்காது.


1 comment:

  1. மிக நல்ல பாடல். எனக்கு இந்தப் பட்டியல் மிகவும் பிடித்திருக்கிறது.

    ReplyDelete