Monday, July 29, 2013

இராமாயணம் - எழுதல் ஆகலாச் சுந்தரன்

இராமாயணம் - எழுதல் ஆகலாச் சுந்தரன் 


வந்த இராவணனை அமரச் சொன்னாள் சீதை. இருவரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் யார், இங்கே என்ன செய்கிறீர்கள் என்று சீதை கேட்கிறாள்.

சந்நியாசி வேடத்தில் இருக்கும் இராவணன் சொல்கிறான்...."நான் இராவணன் வாழும் இலங்கையில் இருந்து வருகிறேன். அந்த இராவணன் எப்படி பட்டவன் தெரியுமா " என்று அவனே அவன் பெருமை பற்றி பேசுகிறான்.....

பாடல்

இந்திரற்கு இந்திரன்; எழுதல் ஆகலாச்
சுந்தரன்; நான்முகன் மரபில் தோன்றினான்;
அந்தரத்தோடும் எவ் உலகும் ஆள்கின்றான்;
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான். 


பொருள்





இந்திரற்கு இந்திரன் = இந்திரனுக்கு இந்திரன். இந்திரன் தேவர்களுக்கு எல்லாம் அதிபதி. இராவணன் அந்த இந்திரனுக்கும் மேலானாவன்.

எழுதல் ஆகலாச் சுந்தரன் = அவனை எழுத்திலோ ஓவியத்திலோ வடிக்க முடியாது. அவ்வளவு அழகன். அவ்வளவு பெருமை கொண்டவன்.


நான்முகன் மரபில் தோன்றினான் = பிரம்மாவின் குலத்தில்  தோன்றியவன்

அந்தரத்தோடும் எவ் உலகும் ஆள்கின்றான் = தேவ லோகம் உட்பட எல்லா உலகையும் ஆள்பவன்

மந்திரத்து அரு மறை வைகும் நாவினான் = அவன் நாவில் எப்போது மந்திரமும், வேதமும் தங்கி இருக்கும்.



No comments:

Post a Comment