Saturday, July 20, 2013

ஜடாயு - வஞ்சனை இழைத்தனன்

ஜடாயு - வஞ்சனை இழைத்தனன்


இராமனும் இலக்குவனும்  போது இராவணன் எப்படி சீதையை தூக்கி வந்திருக்க முடியும் ? ஒருவேளை இது கைகேயின் சூழ்ச்சியாக இருக்குமோ என்று ஜடாயு சந்தேகம் கொண்டான்.

பின் மேலும் சிந்திக்கிறான்.

ஆதி  சேடன் என்ற பாம்பை பஞ்சனையாக கொண்ட கருமை நிறம் கொண்டவனே இந்த இராமன். அப்படிப்பட்ட இராமன் இந்த இராவணன் வெல்வதாவது ? இருக்காது . ஏதோ வஞ்சனை மற்றும் மாயம் செய்து கள்ளத்தனமாய் சீதையை தூக்கி வந்திருப்பான்....


பாடல்

“பஞ்சு அணை பாம்பு அணை ஆகப் பள்ளி சேர்
அஞ்சன வண்ணனே இராமன்; ஆதலால்
வெஞ்சின அரக்கனால் வெல்லற்பாலனோ?
வஞ்சனை இழைத்தனன் கள்ள மாயையால். “

பொருள் 



பஞ்சு அணை = பஞ்சு மெத்தை

பாம்பு அணை ஆகப் = பாம்பு மெத்தையாக

பள்ளி சேர் = படுத்து இருக்கும் ; பள்ளி கொண்டிருக்கும் 

அஞ்சன வண்ணனே இராமன் = அஞ்சனம் என்றால் மை. மை வண்ணனே இந்த இராமன்.

ஆதலால் = ஆதலால்

வெஞ்சின அரக்கனால் = வெம்மையான சினம் கொண்ட அரக்கனால்

 வெல்லற்பாலனோ? = வெல்லப்படக் கூடியவனா (இல்லை)

வஞ்சனை இழைத்தனன் கள்ள மாயையால் = (இராவணன்) ஏதோ வஞ்சகம் செய்திருக்க வேண்டும்

ஜடாயுவின் கூறிய அறிவை நாம் நினைக்க வேண்டும்.

அந்தத்  திருமால் தான் இராமன் என்று உணர்ந்து இருக்கிறான்

இராமனை வெல்ல முடியாது என்று அவனுக்குத் தெரிந்து இருக்கிறது

அப்படியென்றால் ஏதோ வஞ்சகம் நடந்து இருக்க வேண்டும் என்றும் யுகிக்கிறான்.

கம்பனின் பாத்திரப் படைப்பு

No comments:

Post a Comment