Saturday, October 12, 2013

இராமாயணம் - பெண்களால் மரணம்

இராமாயணம் - பெண்களால் மரணம் 


சுக்கிரீவனுக்கு முடி சூட்டிய பின், இராமன் அவனுக்கு சில அறிவுரைகள் கூறுகிறான். அந்த காலத்தில் ஒருவன் ஒரு பொறுப்பை எடுத்துக் கொள்ளப் போகிறான் என்றால் பெரியவர்கள் அவனுக்கு அறிவுரை கூறுவது வழக்கம். இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்று அறிவித்தவுடன் , அவனுக்கு வசிட்டர் அறிவுரை வழங்கினார்.

இங்கே இராமன் வழங்குகிறான்.

மக்களுக்கு பெண்களால் எப்போதும் துன்பம்தான். துன்பம் என்று லேசாக சொல்லவில்லை. பெண்களால் மரணம் வரும் என்கிறான். இதில் சந்தேகமே இல்லை. அவர்கள் கட்டாயம் உயிரை எடுப்பார்கள். வாலியின் வாழ்க்கையும் எங்கள் வாழ்க்கையும் இதற்கு உதாரணம் என்கிறான். 

பாடல் 

மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்" என்றல்,
சங்கை இன்று உணர்தி; வாலி செய்கையால் சாலும்; இன்னும்,
அங்கு அவர் திறத்தினானே, அல்லலும் பழியும் ஆதல்
எங்களின் காண்டி அன்றே; இதற்கு வேறு உவமை உண்டோ? 

பொருள் 

மங்கையர் பொருட்டால்  = பெண்களால் 
எய்தும் மாந்தர்க்கு மரணம்" என்றல், = மக்களுக்கு மரணம் வரும் 

சங்கை இன்று உணர்தி;  - சந்தேகம் இல்லாமல் இதை உணர்ந்து கொள் 
வாலி செய்கையால் சாலும்; = இது வாலியின் செய்கையாலும் 
இன்னும் = மேலும் 
அங்கு அவர் திறத்தினானே = அவர்கள் (பெண்களின்) திறமையால் 
அல்லலும் = துன்பமும்
பழியும் ஆதல் = பழியும் வந்து சேர்ந்ததை 
எங்களின் காண்டி அன்றே; = எங்கள் வாழ்க்கையில் இருந்து பார்த்துக் கொள்
இதற்கு  வேறு உவமை உண்டோ = இதற்கு வேறு ஒரு சான்றும் தேவையா 

இது இராமன் சொன்னது. 

இராமன் சொல்லாமல் விட்டது ....

கூனியால் , கைகேயியால் ... சக்ரவர்த்தி தசரதன் இறந்தான் 
சுக்கிரீவன் மனைவியால் வாலி இறந்தான் 
சூர்பபனாகியால், சீதையால் - இராவணன் இறந்தான், கும்ப கர்ணன் இறந்தான், இந்திரஜீத் இறந்தான், மாரிசன் இறந்தான் 





 

3 comments:

  1. ஓ! அப்ப பெண்கள் இல்லை என்றால் ஆண்களுக்கு மரணமே கிடையாதா? 1000 ஆண்டுகள் வாழ்ந்து விடுவார்களா? ஆண்கள் மனைவியை விட்டு விட்டு வேறு பெண்கள் பின்னால் அலைந்து கிறுக்கு வேலைகள் செய்தால் இன்னல்கள் வரத்தான் செய்யும். அதற்காக பெண்களால் மரணம் என்று எப்படி சொல்லலாம்?

    ReplyDelete
  2. முக்கோடி வாழ் நாள் கொண்ட இராவணன் முன் முடிந்தான். இராவணன் சீதையை விரும்பக் காரணம் சூர்பனகை என்ற பெண். பொன் மான் வேண்டிய சீதையால். 1000 ஆண்டுகள் வாழ்ந்து விடுவார்களா என்பதல்ல கேள்வி, முக்கோடி வாழ் நாள் கொண்டவன் இராவணன். அற்ப ஆயுளில் முடிந்தான்.

    தசரதன் இறந்தது மாற்றான் மனைவியை வேண்டியதால் அல்ல. கூனி என்ற பெண்ணால். கைகேயி என்ற பெண்ணால். அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவன்.

    வாலி இறந்ததும் பெண்ணால். தாரத்தோடு தலைமையும் உனக்கு தருவேன் என்றான் வாலி. அமிழ்து தனக்கு வேண்டாம் என்று தேவர்களுக்கு தந்தவன்.

    மங்கையரால் மாந்தர்க்கு மரணம் வரும் என்று சொன்னவன் இராமன்.

    ReplyDelete
  3. 1. பெண்களின் சூழ்ச்சியால் (உதாரணம்: கூனி), பேதமையால் (உதா: சீதை) ஆண்களுக்குக் கஷ்டம் வந்தது எவ்வளவோ, அதை விட அதிகம் ஆள்களால் பெண்களுக்கு வந்த கஷ்டம். இதில் ஒரு பக்கத்தை மட்டும் இராமன் சொல்வது ஏன்?!?

    2. பெண்கள் ஒன்று சொன்னதால், ஆண்கள் கெட்டனர் என்றால், அந்த ஆண்களுக்கு மூளை இல்லையா? எது சரி, எது தவறு என்று யோசிக்க முடியவில்லையா?

    3. ஆண்-பெண் உறவு மிகவும் சிக்கலானது. அதை இப்படி ஒரு வரியில் சொல்லிவிட முடியாது.

    ReplyDelete