Wednesday, April 10, 2013

கந்தர் அலங்காரம் - இறை தேடல்


கந்தர் அலங்காரம் - இறை தேடல் 


இறைவனை தேடுவது ரொம்ப கடினமா ? இல்லவே இல்லை என்கிறார் அருணகிரிநாதர். இன்னும் சொல்லப் போனால் உள்ளதிர்க்குள் மிக எளிமையான வேலை என்கிறார்.

ரொம்ப ஒண்ணும் செய்ய வேண்டாம்...."கந்தா" என்று சொன்னால் போதும். உங்களுக்கு கந்தன் வேண்டாம் என்றால் உங்கள் கடவுளை சொல்லுங்கள். அவ்வளவுதான்.

ஹா...அது எப்படி...அருணகிரி வேறு என்னவெல்லாமோ தவம் செய்து இருப்பார், பூஜை செய்து இருப்பார்....இல்லாவிட்டால் சும்மா கந்தா என்றால் பலன் கிடைக்குமா ?

அவரே சொல்கிறார் .... இப்படி கந்தா என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் அறியேன் என்கிறார்.

சரி, கந்தா என்று அவன் நாமம் ஜெபிப்போம்....எப்ப பலன் கிடைக்கும் ?

உடனே...கை மேல் பலன் என்கிறார் அருணகிரி. பிற்காலத்தில், அடுத்த பிறவியில் என்று காத்திருக்க வேண்டாம்....கை மேல் பலன்.

உடனடி பலன் மட்டும் அல்ல....நீண்ட நாள் பலனும். நீண்ட நாள் என்றால் எவ்வளவு நாள் ?  ஒரு ஒரு வாரம்,, மாதம் , வருடம் ? எவ்வளவு நாள் ?

நீங்கள் எப்போது சொல்கிறீர்களோ அப்போதில் இருந்து நீங்கள் மரணம் அடையும் வரை அதன் பலன் இருக்கும்.

நீங்கள் கற்ற கல்வி மறந்து போய் விடும். பத்தாம் வகுப்பில் படித்த குரல் ஞாபகம் இருக்கிறதா ? கல்லூரியில் படித்த பாடங்கள் நினைவு இருக்கிறதா ? கல்வி  மறந்து கொண்டே வரும். மரணத் தருவாயில் ஒன்றும் ஞாபகம் இருக்காது.

உங்கள் சுற்றம், ஊர் பொது மக்கள் யாரவது உங்களை மரணத்தில் இருந்து காக்க முடியுமா ? கிட்ட இருந்து அழலாம்...வேறு என்ன செய்ய முடியும் ?

கல்வியை விடுங்கள், சுற்றமும் நட்பையும் விடுங்கள்....உங்கள் புலன்கள் உங்களுக்கு துணை செய்யுமா ?

நாக்கு குழறும், கண் பஞ்சடையும், காது கேக்காது...இப்படி உங்கள் புலன்களே உங்களை வஞ்சனை செய்யும். எவ்வளவு செய்து இருப்பீர்கள் இந்த புலன்களுக்கு....கடைசி நேரத்தில் உங்களை கை விட்டு விடும்.

எல்லாம் உங்களை விட்டு விட்டு போய் விடும். எதுவும் உதவி செய்யாது...ஒன்றே ஒன்றைத் தவிர...அவன் நாமத்தை தவிர.

பாடல்  

மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறி யேன்கற்ற கல்வியும் போய்ப்
பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே.

சீர் பிரித்த பின்

மை வரும் கண்டத்தர் மைந்தா கந்தா என்று வாழ்த்தும் இந்த 
கை வரும் தொண்டு அன்றி மற்று அறியேன் கற்ற கல்வியும் போய் 
பை வரும் கேளும் பதியும் கதற பழகி நிற்கும் 
ஐவரும் கை விட்டு மெய் விடும் போது உன் அடைக்கலமே 



பொருள்


Tuesday, April 9, 2013

தாயுமானவர் - உன்னை பூசை பண்ண மாட்டேன்


தாயுமானவர்  - உன்னை பூசை பண்ண மாட்டேன் 

தாயுமானவர் ஒரு நாள் பூஜைக்கு மலர் பறிக்கச் சென்றார். மலரின் அருகே சென்று அதை பறிக்க எத்தனிக்கையில் அவருக்கு ஒன்று தோன்றியது. இந்த மலரில் இருப்பதும் அந்த இறைவன் தானே. அந்த மலரைப் பறித்தால் அது வாடிப் போகுமே என்று நினைத்தார். பூவை பறிக்காமலே வந்து விட்டார். மலர் இல்லாமலே வழி படுவோம் என்று இரு கை கூப்பி வணங்க முனைந்தார்....மீண்டும் ஒரு சந்தேகம்...வணங்கப் படும் கல் சிலை தெய்வம் என்றால் வணங்கும் எனக்குள்ளும் இருப்பது அதே கடவுள் தானே...அப்படி என்றால் பாதி வணக்கம் தானே முன்னாள் இருக்கும் கடவுளுக்குப் போகும்...மீதி பாதி எனக்குள் இருக்கும் கடவுளுக்குத்தானே போகும்....இது என்ன பாதி வணக்கம் ?


பாடல் 

பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே
பாவித் திறைஞ்சஆங்கே
பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்திஅப்
பனிமல ரெடுக்கமனமும்
நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கஎனில்
நாணும்என் னுளம்நிற்றிநீ
நான்கும்பி டும்டோ தரைக்கும்பி டாதலால்
நான்பூசை செய்யல் முறையோ
விண்ணேவி ணாதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந்தமே
மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தேஅ வித்தின் முளையே
கண்ணே கருத்தேஎன் எண்ணே எழுத்தே
கதிக்கான மோனவடிவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 6.


சீர் பிரித்த பின் 

பண்ணேன் உனக்கு ஆனா பூசை ஒரு வடிவிலே 
பாவி இறைஞ்ச ஆங்கே 
பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி 
அப் பனி மலர் எடுக்க மனமும் 

நண்ணேன் அல்லாமல் இரு கைதான் குவிக்க எனில் 
நாணும் என் உள்ளம் நிற்றி நீ 
நான் கும்பிடும் டோதரைக் கும்பிடாதலால்
நான் பூசை செய்யல் முறையோ
விண்ணே விணாதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந்தமே
மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தே அவித்தின் முளையே
கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே
கதிக்கான மோன வடிவே
கருதரிய சிற்சபையில் ஆனந்த நர்த்தமிடும் 
கருணாகர ககடவுளே.

.

இராமாயணம் - எல்லாம் பார்வையில் இருக்கிறது


இராமாயணம் - எல்லாம் பார்வையில் இருக்கிறது 


இந்த உலகமும் அதில் நடக்கும் செயல்களும் அவற்றின் விளைவுகளும் நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது. 

துன்பம் என்று நினைத்தால் துன்பம். இன்பம் என்று நினைத்தால் இன்பம். 

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை 
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே என்பார் நாவுக்கரசர். இந்த உலகம் நாம் பண்ணியது. இன்பமோ , துன்பமோ உங்களை சுற்றியுள்ள உலகம் நீங்கள் பண்ணியது. (பாவம் இயற்கையாக வருவது அல்ல, நாம் கற்றுக் கொள்கிறோம். பயின்ற பாவம்.... இந்தப் பாடல் நமச்சிவாய பதிகம் என்ற தொகுதியில் உள்ளது. நேரம் இருப்பின், அது பற்றி பின்னர் சிந்திப்போம்).


இதெல்லாம் சொல்ல நல்லாத்தான் இருக்கு, நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்று நீங்கள் நினைக்கலாம்.

இராமனின் வாழ்க்கையில் இருந்து ஒரு காட்சி....எப்படி ஒரு நிகழ்வு ஒருவருக்குத் துன்பகமாகத் தெரிகிறது, இன்னொருவருக்கு இன்பமாகத் தெரிகிறது....

கைகேயி இராமனை கானகம் போகச் சொல்லுகிறாள்....கைகேயியை பொருத்தவரை கானகம் என்பது  துன்பம் நிறைந்த இடம். புழுதி படிந்த இடம். சுத்தம் இல்லாத இடம். சேரும் சகதியும் நிறைந்த இடம். அந்த காட்டுக்குப் போ என்றாள்.

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ்-இரண்டு ஆண்டின் வா" என்று, இயம்பினன் அரசன்' என்றாள்

பூழி என்றால் துகள். புழுதி என்ற சொல் அதில் இருந்து வந்தது. பூழி புனைந்தவர் என்று கந்த புராணம்  விபூதி அணிந்தவர்களை பற்றி பேசும்.  பூழி என்ற சொல்லுக்கு சேறு, சகதி என்றும் ஒரு  பொருள் உண்டு. 

காடு என்பது புழுதி படிந்தது, சேறும் சகதியும் நிறைந்தது. அது மட்டும் அல்ல. 

அது வெம்மையானது. சூடு மட்டும் அல்ல, வாழத் தகுதி இல்லாத இடம் என்ற பொருளும் உண்டு. 

அப்படிப் பட்ட பூழி வெங் கானம் நண்ணி என்றாள்  கைகேயி. 

அந்த கானகம் இராமனுக்கு எப்படி தெரிகிறது தெரியுமா ?

மின்னலைப் போல் ஒளி வீசும் கானகமாகத் தெரிகிறது. 

ஒளி பொருந்திய கானகம். சூரிய ஒளியாக இருக்க முடியாது. வேறு என்ன ஒளி. முனிவர்களும், அறிவு தாகம் கொண்ட ஞானிகளும் இருக்கும் இடம் கானகம். அவர்களை கண்டு பேசி  அறிவொளி பெறலாம். 

அங்கே முனிவர்கள் யாகம் செய்து கொண்டிருப்பார்கள். அந்த இருண்ட கானகத்தில் அங்கும்  இங்கும் மின்னல் போல் அந்த யாகத் தீ தெரியும். இராமனுக்கு அது மின்னொளி கானகமாகத் தெரிகிறது  .

 'மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.' 


மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் என்றான். 

வாழ்க்கையில் எந்த சூழ்நிலை வந்தாலும் அதில் என்ன நன்மை இருக்கிறது என்று ஆராய்ந்து  அதில் உள்ள நல்லவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். 

வாழ்வில் நமக்கு வேண்டாத, விருப்பம் இல்லாத நிகழ்வுகள் நிறைய வரும். அதனால் உண்டைந்து போய்  விடாமல், கிடைத்ததில் இருந்து என்ன நன்மை அடையலாம் என்று பார்க்க வேண்டும்.. 

காட்டுக்குப் போ என்றால் உடனே ஆஹா மின்னொளிர் கானகம் என்று சந்தோஷமாகப் புறப்பட்டான்  இராமன். 

இது ஒரு உயர்ந்த பாடம் அல்லவா. உங்களுக்கு மட்டும் அல்ல, உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படும். கதை போல் சொல்லி வையுங்கள். என்றேனும் அவர்கள் வாழ்வில் இது பயன்படும். 

Monday, April 8, 2013

தனிப்பாடல் - மரண பயம் நீங்க


தனிப்பாடல் - மரண பயம் நீங்க 


ஒரு நாள் நீங்க காரில் போகும்போது சீட் பெல்ட் போடாமல் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போலீஸ்காரர் உங்களை பிடித்து விடுகிறார். தப்புதான்....அவர் உங்களிடம் கொஞ்சம் தெனாவெட்டாக பேசிக்கொண்டு இருக்கிறார் ..."என்ன சார், படிச்சவங்களே இப்படி வந்தா மத்தவங்கள என்ன சொல்றது ..." என்று லெக்சர் அடிக்க தொடங்கி விடுகிறார்...

அப்போது உங்கள் நண்பர், போலீஸ் - இல் ஒரு மிகப் பெரிய உயர் அதிகாரி அந்தப் பக்கம் வருகிறார் ...

"என்ன சார், இந்த பக்கம்" என்று உங்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு சென்று விடுகிறார்.

அப்ப அந்த டிராபிக் ஆபீசர் எப்படி நடுங்குவார் உங்களைப் பார்த்து ? "என்ன சார், அவர் உங்க நண்பர்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதான்னு " உங்களை பார்த்து கூழை கும்பிடு போடுவார் இல்லையா ?

நமக்கு ஒருவரால் பிரச்சனை என்றால், அந்த ஒருவரின் மிக மிக உயர் அதிகாரியின் நட்பு இருந்தால் அந்த நபரால் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா ? பிரச்சனை செய்த நபரே நம் காலில் வந்து விழுந்து விடுவார் இல்லையா ?

நமக்கு யாரால் மிகுந்த பயம், தொல்லை ?

எமனால்...எப்ப வந்து உயிரை எடுப்பானோ என்று...அவனுடைய உயர் அதிகாரி யார் ? மீனாட்சி. அவளோடு நாம் நட்பு கொண்டாள், இந்த சுண்டக்காய் எமன் என்ன செய்ய முடியும் ?

பலபடை சொக்கநாத புலவர் பாடிய பாடல்   

கான் தெண்டனிட்ட கருங்குழலாலை என் கண்மணியை 
தேன் தொண்டை வாய்ச்சியை தென் கூடலில் சிறு பெண்பிள்ளையை 
யான் தெண்டனிட்ட பொழுதே இயமன் எனக்கும் அடி 
யேன் தெண்டனிட்ட விண்ணப்பம் என்று ஓலை எழுதுவனே 
 
பொருள் 

Saturday, April 6, 2013

அபிராமி அந்தாதி - மெலிகின்ற மெல் இடை


அபிராமி அந்தாதி - மெலிகின்ற மெல் இடை 


பெண்களின் இடைக்கு மின்னலை உதாரணம் கூறுவது வழக்கம். அந்த மின்னலை விட மெலிந்த இடை உள்ளவள் அபிராமி.

நீண்ட கரிய வானில் ஒரு கணத்திற்கும் குறைவான நேரம் தோன்றி மறையும் மின்னலை விட மெலிந்த இடை. இருந்ததோ இல்லையோ என்று சந்தேகப் படும்படி தோன்றி மறையும் மின்னல். அது போல இடை உள்ளவள் எங்கள் அபிராமி.

அவளுடைய கணவன், அவனுக்கு ஏதேனும் ஒரு குறை என்றால் அவளுடைய பாதத்தை அணைத்து தன் தலைமேல் வைத்துக் கொள்வான். அவள் பாதம் உள்ள வரை என்ன கவலை?

சிவனுக்கே ஒரு குறை என்றால் அவள் பாதமே சரண் என்று அவளை அடைகிறான்.

அப்படி என்றால் நான் எம்மாத்திரம் ? எனக்கும் உன் பாதமே கதி என்று சரண் அடைந்து விட்டேன். இனி மேல் நான் மறுபடி பிறந்தால் அது அபிராமி உன் குறையே அன்றி என் குறை அல்ல. என்னை பிறவாமல் காப்பது உன் கடனே

பாடல்

என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே

பொருள்



Thursday, April 4, 2013

கந்தர் அலங்காரம் - கை வரும் தொண்டு - 1


கந்தர் அலங்காரம் - கை வரும் தொண்டு 


ஒரு வேலை செய்தால், அதற்கு உடனே பலன் கிடைத்தால் நல்லதா அல்லது ரொம்ப நாள் கழிச்சு பலன் கிடைத்தால் நல்லதா ? என்று கேட்டால் உடனே கிடைத்தால் நல்லது என்று தயங்காமல் பதில் சொல்லி விடுவீர்கள். 

ஆனால் இறைவனை வணங்கி வழி பட்டால் பலன் உடனே கிடைக்கிறதா ? இறந்த பிறகு, பலன் கிடைக்கும் (சொர்க்கத்தில்) அல்லது இறந்த பின் அடுத்த பிறவியில் கிடைக்கும் என்று சொன்னால் அது எப்படி ? இறைவனை இன்று வழிபட்டேன், எனக்கு இன்றே பலன் கிடைக்க வேண்டும் என்று யாரும் ஏன் கேட்பது இல்லை. இந்த மருந்தை சாப்பிடு, ஒரு நாப்பது அல்லது ஐம்பது வருடத்தில் உன் நோய் குணமாகிவிடும்...அப்படி குணமாகா விட்டால் அடுத்த பிறவியில் கட்டாயம் குணம் ஆகும் என்று ஒரு வைத்தியர் சொன்னால் அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள் ?  ஆனால் உங்கள் மதம் அப்படி சொன்னால் கேட்டுக் கொள்வீர்கள் தானே  ?

அருணகிரி நாதர் சொல்கிறார்....அப்படி எல்லாம் இல்லை ...இறைவனை வழி பட்டால் பலன் கை மேல் கிடைக்கும் என்று சொல்கிறார்....பிறவி கணக்கு அல்ல, வருட கணக்கு அல்ல, வார கணக்கு அல்ல, நாள் கணக்கு கூட அல்ல....உடனே கை மேல் பலன் என்று உறுதியாக கூறுகிறார்....

அவருக்கு கிடைத்ததாம்....

அப்படி அவர் என்ன பெரிதாக செய்து விட்டார் ? பசி அடக்கி, மூச்சு அடக்கி, முள் மேல் நின்று, தீக்கு நடுவில் தவம் செய்து இருப்பாரோ ?

பார்ப்போம் 

Tuesday, April 2, 2013

இராமாயணம் - பதவி வரும் போது

இராமாயணம் - பதவி வரும் போது 


பதவி இழந்த போது இராமன் எப்படி இருந்தான் என்று பார்த்தோம்.

பதவி வரும் போது இராமன் எப்படி இருந்தான் என்று தெரிய வேண்டாமா ?

நமக்கு பதவி வருகின்றதென்றால் எப்படி இருப்போம் ? சந்தோஷமாக இருப்போம்....மற்றவர்களை விடுத்து நமக்குத் பதவி உயர்வு தருகிறார்களே என்று பெருமிதம் கொள்வோம், இத்தனை நாள் தராததே பெரிய குற்றம் என்று அங்கலாய்த்துக் கொள்வோம்...

என்றாவது பதவி உயர்வு நமது கடமை என்று நினைத்தது உண்டா ? பெரிய பதவி என்பது பெரிய பொறுப்பு என்ற கடமை உணர்வு எழுந்தது உண்டா ? நமக்கு மேலும் பொறுப்புகள் கொடுக்கப்படிருகின்றன என்று நினைத்தது உண்டா ?

பதவி உயர்வு, வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இராமன் ஒரு உதாரணம்.

தசரதன், சக்கரவர்த்தி பட்டம் உனக்குத்தான் என்று இராமனிடம் சொன்னபோது இராமன், அந்தப் பதவியின் மேல் ஆசையும் படவில்லை, அதை வெறுக்கவும் செய்யவில்லை. இது தனது கடமை என்று நினைத்தான். கடமை மட்டும் அல்ல, அரசனின் கட்டளை என்று கொண்டான்.

பாடல்



தாதை, அப் பரிசு உரைசெய,
    தாமரைக் கண்ணன்
காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்;
    ‘கடன் இது’ என்று உணர்ந்தும்,
‘யாது கொற்றவன் ஏவியது
    அது செயல் அன்றோ,
நீதி எற்கு?’ என நினைந்தும்,
    அப் பணி தலைநின்றான்.




பொருள்